Tag: #parliament
-
ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ மசோதா ஆகிய மூன்று மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மூன்று சட்டங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மூன்று மசோதாக்களும் முறையாக இந்திய தண்டனைச் சட்டம் 1860,…
-
நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்த இருவர் மக்களவையில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி இரண்டு குப்பியை வீசியதில் மஞ்சள் நிற புகை வெளியேறியது. அவர்கள் இருவரையும் எம்.பி.க்களே வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்களை, பாதுகாப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.…