Tag: #nationalhumanrightscommission
-
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகர் திமுகவை சேர்ந்தவர்கள் என புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக…
-
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் ஜூன் 1, 2024 அன்று முடிவடைந்தது. பின்னர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் விஜயபாரதி சயானி அதன் இடைக்கால தலைவராக உள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்…