Tag: #myv3ads
-
கோவையில் பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மைவி3 உரிமையாளர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி இவரது சார்பில் பாமகவினர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதில் மைவி3 நிறுவனம் விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வந்துள்ளது அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களிடம் இருந்து 2000 கோடி ரூபாயை நிறுவனம் வசூலித்திருக்கிறது என்று…
-
மை வி 3 ஆட்ஸ் என்ற நிறுவனம் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மக்களை ஏமாற்ற முயற்சிப்பதாகவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தொடர்ந்து பாமக வினர் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி யை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கண்ணன் என்ற நபர் மை வி 3 ஆட்ஸ் மீது நீங்கள் அளிக்கும் புகார்களை நிறுத்த வேண்டுமென கொலை மிரட்டல்…
-
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல்துறையில் கோவை பாமக சார்பில் கோவை பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் புகார் மனு அளிக்கபட்டது. மைவி3 விளம்பர நிறுவனத்தின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஒருங்கினைந்த பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோவை மாநகர காவல் ஆனையரிடம் மனு அளிக்கபட்டது. அம்மனுவில் மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவருவதுடன் காவல்துறையினரையும்…
-
மை வி3 ஆட்ஸ் நிறுவனம் குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பரப்புவதாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கச் சென்ற அதன் உரிமையாளர் சக்தி ஆனந்த் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மை வி3 நிறுவனம் விளம்பரம் பார்த்தால் பணம் எனக் கூறி ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்தி ஆனந்த் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு…
-
MYV3Ads என்ற நிறுவனத்தின் மீது பொய் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவை எல் அண்ட் டி பைபாஸ் பகுதியில் குவிந்து வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த ஆன்லைன் செயலி நிறுவனத்தினர் பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து அந்த நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு அந்த நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் நிலையான வருவாய் பெரும் மக்களும், நிறுவனத் தரப்பும்…