Tag: #murder
-
கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டணம் புதூரில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், கிருஷ்ணகுமார் என்றவர் தனது மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். பின்னர், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தனது சொந்த ஊரான வண்டாழி ஈரட்டுகுளம் சென்று, தனது வீட்டின் முன்பாக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களும் கல்லூரிக்கு சென்றிருந்த…
-
மேட்டுப்பாளையம் ஆணவக் கொலை வழக்கில், தம்பியையும், அவரின் காதலியையும் வெட்டிக் கொன்ற அண்ணன் குற்றவாளி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை கோவை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி – பூவாத்தாள் தம்பதிக்கு, வினோத்குமார்(25), கனகராஜ்(22), கார்த்திக்(19) என மூன்று மகன்கள் இருந்தனர். அவர்கள் மூவருமே சுமைதூக்கும் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டில், கனகராஜ், வேறு சாதியை சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற…
-
ஆந்திராவின் அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் என்பவர் தனது மனைவி சந்திரகலாவுடன் குவைத்தில் வேலை செய்து வரும் நிலையில், தனது 12 வயது மகள் சித்தி லட்சுமி வீட்டில் வசித்துள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் வீட்டில் சிறுமி தூங்கிக் கொண்டு இருந்தபோது லட்சுமியின் மாமனார் ஆஞ்சநேயுலு என்ற 59 வயது மாற்றுத்திறனாளி தனது பேத்தி வயதான அந்த சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார். தொடர்ந்து அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்; ஆனால்,…
-
கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.கொடநாடு பங்களாவில் புகுந்த கொள்ளை கும்பல், ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.இது தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி”க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 19 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் ஓட்டுநர் கனகராஜ்…
-
மதுரை, சோழவந்தானில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் வயது 24. தென்னை மட்டை உரிக்கும் தொழில் செய்து வரும் இவர் ,இதே ஊரைச் சேர்ந்த நாகசக்தி வயது 21. என்பவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களது இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் மகன் கிசான்…
-
கோவை துடியலூர் அருகே காசிநஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் இன்று அதிகாலை மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்ற 35 வயது மதிக்கத்தக்க கூலித் தொலிலாளியை மர்ப நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். துடியலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலை நடந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ஜெய்கணேஷ் 35 வயதான இவர் கோவை துடியலூர் அருகே…
-
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஆறுமுகம்(48) கடந்த 2020-ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் காவல் நிலையத்தில் ஆறுமுகம் மீது வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கின் விசாரணை கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று குற்றவாளி ஆறுமுகத்திற்கு ஆயுள் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட…
-
கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த திருநங்கை தனலட்சுமி என்கிற சோமசுந்தரம் (37). இவர் வடவள்ளி அடுத்த மருதமலை இந்திரா நகர் பகுதியில் உள்ள மாசிலாமணி (33) என்ற திருநங்கை வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். மேலும் மாசிலாமணி மற்றும் அவருடன் தங்கி இருக்கும் மணி, தனலட்சுமி ஆகிய மூவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் தனலட்சுமி மாசிலாமணி வீட்டுக்கு வந்துள்ளார். மூவரும் வீட்டில் இருந்த நிலையில், மாசிலாமணி மற்றும் மணி இருவரும் மாலை 4 மணிக்கு…