Tag: #mou
-
கோவை , எஸ் .என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளையின், ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், இஸ்ரேலை சேர்ந்த ஏரியல் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஆர் சுந்தர் மற்றும் ஏரியல் பல்கலைக்கழகத்தின் ஆல்பர்ட் பின்ஹாசவ் ஆகியோர் கையெ ழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இரு நிறுவனங்கள் கூட்டுக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளை மேற்கொள்வதற்கும், பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கும், சைபர் துறையில் பாதுகாப்பு, சுகாதார அறிவியல் என…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் ஈஸி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். இந்த ஒப்பந்தத்தில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் ஈசி டிசைன் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சிஇஓ பத்மநாபன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் கல்வி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையில் இன்டர்ன்ஷிப், பயிற்சிகள், நடைமுறைத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை வடிவமைத்தல்,…
-
கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, மகேந்திரா பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட், கோஇண்டியா மற்றும் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகிய மூன்று நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், மகேந்திரா பம்ப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குனர் மிதுன் ராம்தாஸ், கோஇண்டியா அமைப்பின் தலைவர் டி.விக்னேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, இந்த ஒப்பந்தமானது கல்லூரி மாணவிகளுக்கு இன்டர்ன்ஷிப்,…
-
எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியுடன் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர். எஸ்என்ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் மற்றும் வைஷ்ணவ் கல்லூரி முதல்வர். முனைவர்.அர்ச்னா பிரசாத் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கல்லூரி முதல்வர் முனைவர். கி சித்ரா இந்த ஒப்பந்தமானது கல்விப் பரிமாற்றங்கள், கூட்டு முயற்சிகள் ஆராய்ச்சி, போன்ற செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் என்றார். எஸ்என்ஆர் சன்ஸ் நிர்வாகத்தின் இயக்குநர் முனைவர்.என்.ஆர்.அலமேலு இந்த முயற்சி சிறக்க வாழ்த்தினார்.
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோவை கேர்ஸ் ரினியூவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து மற்றும் நிலைத்தன்மை மற்றும் ஆற்றல் பயிற்சியாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை தலைவர் அல்லி ராணி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கேர்ஸ் ரினியூவபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், நிலைத்தன்மை…
-
தாய்லாந்து மெத்தராத் பல்கலைக்கழகத்துடன், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. இவ்வொப்பந்தத்தில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பில், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, தாய்லாந்து மெத்தராத் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் சௌ ஃபெய் ஆகியோர் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வொப்பத்தின் மூலம், ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், குறுகிய கால கற்றல் பயிற்சிகள், இரு கல்வி நிறுவன…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் “சிறுதுளி” அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. கோவை உக்கடம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள சிறுதுளி நொய்யல் வாழ்வியல் மையத்தில், புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி, சிறுதுளி அமைப்பின நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் ஆகியோர் கையொப்பமிட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல்…