Tag: #mkstalin
-
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் மோடி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., தமிழக அமைச்சர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேப்பேரியில் பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனிடையே, குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோபாலாபுரம்…
-
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு இனி பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் கோ பேப் மோடி என சொல்ல மாட்டார்கள் கெட் அவுட் மோடி என்று சொல்வார்கள் என கூறியிருந்தார். இதனை அடுத்து #GetOutModi எனும் ஹேஸ்டேக் எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்யப்பட்டது. தொடர்ந்து, திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை, பாரதிய ஜனதா…
-
சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லைக்கு விசிட் அடித்தார். அப்போது, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனை வைத்து கொண்டே மேடையில் ஸ்டாலின் பேசியதாவது, ‘ 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எப்படிப்பட்ட பெருமழை பெய்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மத்திய அரசு நிவாரண நிதி தரவில்லை. மாநில அரசு தங்களிடம் இருந்த நிதியை கொண்டுதான் மக்களுக்கு உதவியது. இதை சொல்வதற்காக நம்முடைய நயினார் நாகேந்திரன் கோபித்து கொள்ள கூடாது.…
-
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- போராட்டம் நடத்துகின்ற உரிமையில்லையென்று சிலர் தவறான வாதங்களை வைக்கின்றார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், “அளவுக்கு மீறிய ஜனநாயகவாதியாக இருக்கின்றீர்கள்” என்று தான் என்னை சிலர் விமர்சித்திருக்கின்றார்களே தவிர, நான் சர்வாதிகாரியாக இருப்பதாக யாரும் சொல்ல மாட்டார்கள். அது என்னுடைய இயல்பும் இல்லை. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளும் போராட்டம் நடத்தலாம் என்று சொல்பவன் நான். போராடலாம், தவறு இல்லை; போராட வேண்டிய…
-
திமுக தலைமையிலான கூட்டணி, கொள்கை கூட்டணி மட்டுமல்லாமல் நிரந்தர கூட்டணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லக்கண்ணுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தொடங்கி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில் நான் நேரில் வாழ்த்து…
-
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மருமகனும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் மறைவிற்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்,Ex,mla ., கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.
-
தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 2 ஆவது முறையாக சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான லீலா பேலஸில், தமிழக முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு…
-
முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார். இன்று முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.
-
மத்திய அரசுத் துறைகளின் பணியிடங்களுக்கு லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்மையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி, லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 துணை செயலாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
-
திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார். ரூ.1916 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படவுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் வறட்சிப்பகுதிகளில் உள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அதனை பயன்படுத்தும்…