Tag: #ministermuthusamy
-
முன்னணி பல்துறை மருத்துவமனையாக விளங்கும் கேஎம்சிஹெச் தனது சமூக கடமைகளில் ஒரு பகுதியாக ஈரோடு நல்லாம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரோட்டரி சென்ட்ரல் அமைப்புடன் இணைந்து டாக்டர் என்ஜிபி பிளாக் என்ற புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ரூ. 2 கோடியே 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் 8 வகுப்பறைகள், ஒரு ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் நூலகம் அமைந்துள்ளன. கேஎம்சிஹெச் மருத்துவமனை…
-
மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கோவை நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட உள்ள கணபதி ராஜ்குமார், தமிழக வீட்டு வசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி,கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி…
-
கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் நலத்திட்ட உதவிகள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா, மற்றும் அரசு அலுவலர்கள்…
-
மும்பை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் வந்த அமைச்சர் முத்துசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகளை விமான நிலையத்துக்குள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முடித்து விட்டு கோவை விமான நிலையம் வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் செல்லும் பொழுது அவரை…
-
சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கம்பு, சோளம், திணை, குதிரைவாலி, கேழ்வரகு, ராகி உள்ளிட்ட சிறுதானிய உணவுகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “2023 ம் ஆண்டை ஐநா சபை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதன் அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம்…