Tag: #michuang

  • சிங்காரச்‌ சென்னையை உருவாக்குகிறோம்‌ என்று வெளிநாடுகளுக்கு சுற்றுப்‌ பயணம்‌ செய்து சாதித்தது என்ன?

    2016 ஆம் ஆண்டு வர்தா புயலின்போது சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில் பாதித்த பகுதிகள் போர்க்கால அடிப்படையில் இரண்டு நாட்களில் சீரமைக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கை யில், “கடந்த 2016 ஆம் ஆண்டு வர்தா புயலின் போது  சென்னையில் 6 லட்சம் மரங்கள் சாய்ந்த நிலையில், புயலினால் பாதிக்கப்பட்டப் பகுதிகள் போர்க்கால அடிப்படையில் இரண்டு நாட்களில் சீரமைக்கப்பட்டது. 25 ஆயிரம் மின்கம்பங்கள், தகவல் தொடர்பு…

  • தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்த மத்திய குழு

    தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட பட்டாளம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஆய்வு நடத்தினா். இன்றைய அய்வு முடிந்த பின்னர் பேசிய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி கூறியது: “மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் மூலம் வந்துள்ள எனது தலைமையிலான 6 பேர் கொண்ட குழு,…

  • 6000 நிவாரண தொகை வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி-பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் முகம்மது ரபி

    சென்னை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண பணிகளை துவக்கி, உடனடியாக ஆறாயிரம் ரூபாய் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் முகம்மது ரபி கோவையில் தெரிவித்துள்ளார்.. பல் சமய நல்லுறவு இயக்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் காந்தி தலைமையில் சாய்பாபா காலனி பகுதியில் ராஜா அண்ணாமலை அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி , மாநிலத் தலைவர்…

  • ​மிக்ஜாம் புயல் – கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டல மாமன்ற உறுப்பினர்கள் நிதி உதவி

    ​கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினர். கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ரூ.25,000/- மற்றும் கவுன்சிலர் சிங்கை மு.சிவா ரூ.25,000/-  நிதி வழங்கினார்.  மாமன்ற உறுப்பினர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி  (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) ரூ.25,000/-, ஜி.வி. நவீன் குமார் (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) ரூ.15,000/-, ர.பூபதி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)…

  • கோவை தொண்டாமுத்தூர் செங்கல் உற்பத்தியாளர்கள் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள்

    கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் செங்கல் உற்பத்தியாளர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அவர்களிடம் சென்னை வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவையில் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல், கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் தொண்டாமுத்தூர் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், 2,600 அரிசி மூட்டைகள், 2,200 போர்வைகள் ஆகியவை புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த…

  • சென்னை வெள்ள நிவாரணப் பணி-  மருத்துவக் குழுவுடன் களமிறங்கிய ஈஷா

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொழிந்த அதிகனமழை காரணமாக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இவ்வாறு வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஈஷா  மருத்துவக் குழு வழங்கி வருகிறது. இதற்காக கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து ‘ஈஷா அவுட்ரீச்’ சார்பில் நடமாடும் மருத்துவ வாகனங்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் சென்னை சென்றடைந்தனர். இவர்கள் மூன்று மருத்துவ குழுக்களாக இயங்கி, வட மற்றும்…

  • மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்- வானதி சீனிவாசன் பேட்டி

    மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகையை வங்கி கணக்கில் செலுத்தவதன் மூலம் விரைவாக, எளிதாக, எந்த செலவும் இல்லாமல், அரசு ஊழியர்களுக்கு எந்த பாரமும் இல்லாமல் , ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தொந்தரவு இல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு இந்த பணம் போய் சேரும் என தெரிவித்துள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதலமைச்சர் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கோவை பாஜக அலுவலகத்தில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய…

  • நகராத புயலால் பெரும் விளைவு சென்னைக்கு எப்போது நிரந்தர தீர்வு

    சென்னை தற்போது 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. உலகின் 35 – வது பெரு நகரமாகவும், இந்தியாவின் நான்காவது பெரு நகரமாகவும் திகழும் சென்னை நகரம் , வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. மெட்ராஸ் என பெயர் கொண்ட இம் மாநகரை 1996 -ல் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி “சென்னை” என மாற் றினார். 2011-ம் ஆண்டில் 78 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சென்னையின் தற்போதைய மக்கள் தொகை…

  • முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் சென்னைக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடியாத பகுதிகளில் மீட்புப் பணிகள் மற்றும் மழைநீர் அகற்றும் பணிகளில் மத்திய, மாநில பேரிடர் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலர் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர்…

  • சென்னையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் நிவாரண உதவி

    சென்னையில் மிக் ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவை மாநகர காவல்துறை சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது . கோவையில் இருந்து ரூ 6 லட்சம் மதிப்புள்ள உணவு , உடை, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஒரு லாரி மூலம் அனுப்பப்பட்டது. இதை கோவை மாநகர காவல் ஆணையாளர்  பாலகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை ஆணையாளர்கள்  சண்முகம், சந்தீஷ், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் ஆனந்த், ஆயுதப்படை உதவி ஆணையாளர்  சேகர், இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ்…