Tag: #medicalcamp
-
அவிநாசி கிழக்கு ரோட்டரி, அவிநாசி கிழக்கு ரோட்டராக்ட், அரவிந்த் கண் மருத்துவமனை, ரேவதி மெடிக்கல் சென்டர் திருப்பூர், மற்றும் ஹார்ட்ஃபுல்னெஸ் கவுன்செல்லிங் சென்டர் திருப்பூர் இணைந்து, தண்டுக்காரம்பாளையம் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம், இலவச பொது மருத்துவ பரிசோதனை மற்றும் ஈ.சி.ஜி. முகாம், மற்றும் பொது மனநல ஆலோசனை முகாம் நடத்தினர். இதில் 103 பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 32 பயனாளிகளுக்கு குறைந்த விலையில் கண்ணாடி வழங்கப்பட்டது, மற்றும் 9 பயனாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ரோட்டரி…
-
உலக இருதய தினத்தை முன்னிட்டு ராயல் கேர் மருத்துவமனை, நீலாம்பூர் மற்றும் சிட்டி யூனிட், காந்திபுரத்தில் மாபெரும் கட்டணமில்லா இருதய மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு ரூபாய் 3,000 மதிப்புள்ள இரத்தத்தில் சர்க்கரை அளவு , ஈ சி ஜி, எக்கோ ஸ்கேன் பரிசோதனைகள், இருதய நிபுணர்கள் மருத்துவ ஆலோசனை, உணவு ஆலோசகர் ஆலோசனை, யோகா பயிற்சி கட்டணமில்லாமல் அளிக்கப்பட்டது. ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் க மாதேஸ்வரன் கூறும் பொழுது…
-
கோவையில் ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடைபெற்ற காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாம் அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. முகாமை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை என விரிவான மருத்துவ முகமாக நடைபெற்றது. இந்த முகாமை துவக்கி வைத்த பின் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அபோது அவர், காவலர்களின்…
-
கோவை கணுவாய் எம்.ஐ.எஸ்.ஜே பள்ளிவாசல் ஜமாத் சார்பாக குளிர் கால நோய்களுக்கு ஆங்கில மருத்துவ முகாம் கிருபா மருத்துவமனை டாக்டர். டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமையிலும், நீண்ட கால நோய்களுக்கு மருதம் சித்தா கிளினிக் டாக்டர் என். அப்துல் அஜீஸ் தலைமையிலும் சித்த மருத்துவ முகாம் ஆகியவை பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது . இந்த மருத்துவ முகாமினை ஏற்பாடு செய்த ஜமாத் தலைவர் அயூப் கான் மற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.