Tag: #maruthamalai

  • மருதமலையில் தைப்பூசத் தேரோட்டம்- அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

    கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழா கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திங்கட்கிழமை திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்தார். அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில், விநாயகர், வீரபாகு, சூலத்தேவரும், பெரிய தேரில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன்…

  • மருதமலை  கோவிலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம்

    கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு அமைந்துள்ள மலைப்பாதையில் கார் உள்பட 4 சக்கர வாகனங்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து செல்ல அறங்காவலர் குழு சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதன்படி, காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும், பிற்பகல்  1 முதல் மாலை 6 மணி வரை 150 நான்கு சக்கர வாகனங்களும் என நாள்…

  • Untitled post 1215
    ,

    கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானின் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் ,அபிஷேகங்கள் நடைபெற்றது.அதன் பின்னர் விநாயகர், மற்றும் சுப்ரமணிய சுவாமி, வள்ளி,தெய்வானை தம்பதி சமேதமாக திருத்தேரில் எழுந்தருளினர்.தொடர்ந்து தைப்பூசத்தில் பங்கேற்ற பக்தர்கள் மற்றும் அறங்காவலர்கள் குழுவினர் தேரை வடம் பிடித்து இழுத்து கோயிலை வலம் வந்த சுவாமிக்கு…

  • மருதமலை அருகே இரு காட்டு யானைகள் மோதல் – ஒரு யானை உயிரிழப்பு

    கோவை மருதமலை அண்ணா பல்கலைகழகம் அருகே உள்ள வனப்பகுதியில் இரண்டு காட்டு யானைகளிடையே ஏற்பட்ட மோதலில் ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. கோவை தடாகம் வனப்பகுதியில் இருந்து மருதமலை வனப்பகுதி வழியாக தினமும் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மருதமலை அருகே உள்ள அண்ணா பல்கலைகழகம் பின் புறம் உள்ள வனப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக கோவை வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச்…