Tag: #makkalneedhimaiam

  • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக நடிகர் கமல் மீண்டும் தேர்வு

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவராக நடிகர் கமல் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். நடிகர் கமல் ஹாசன், 2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கினார். 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட்டு 16 லட்சத்திற்கும் அதிகமாக ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது.  2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் தனித்தே அக்கட்சி களமிறங்கியது. இருப்பினும் ஒரு தொகுதிகளில் கூட அக்கட்சியால் வெற்றிபெற முடியவில்லை. நடிகர் கமலும் கோவை தெற்கு…

  • பாஜகவில் இணைந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் அனுஷா ரவி

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர்(பரப்புரை) பதவி வகித்து வந்த அனுஷா ரவி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு அவர் அளித்துள்ள் ராஜினாமா கடிதத்தில், “தேர்தல் அரசியலில் (Electoral Politics) மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.” குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சென்னையில் பாஜக…

  • நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை – கமல்ஹாசன் அறிவிப்பு

    நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடவில்லை என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்ததையடுத்து அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டும் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்றும், கோவை தொகுதி கமலுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் கமல்ஹாசன் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மக்கள் நீதி மையத்திற்கு மாநிலங்களவையில் ஒரு சீட் ஒதுக்கீடு…

  • கோவையில் கமல் போட்டியா? வைரலாகும் மக்கள் நீதி மய்யம் ஒட்டிய போஸ்டர்கள்

    கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  ஏழாம்  ஆண்டு துவக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அக்கட்சி சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் “தமிழக மக்களின் அடிமட்ட சாமான்யனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க… நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம்! என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. கமல் மீண்டும் கோவையில் போட்டியிடுவது உறுதி செய்வதைப் போல, கோவை மாநகரின் முக்கிய இடங்களில் மக்கள்…

  • கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

    இந்தியாவில் விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கித் தருமாறு தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம்…