Tag: #madurai
-
மதுரை, சோழவந்தான் பேரூராட்சி சார்பில் , போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சோழவந்தான் பேரூராட்சி சார்பில், அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூர் துணைச் செயலாளர் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…
-
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பாக உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கச்சைகட்டி ஊராட்சியில், நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் வி.எம். காளிதாஸ் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், தவசி,தமிழரசன், மாணிக்கம்,கருப்பையா, மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல், தனராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பாசறை துணைச் செயலாளர் எம்.கே.மணிமாறன் வரவேற்றார். இதில்உறுப்பினர் அடையாள அட்டையை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார்…
-
மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதிகளில், கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விடுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கால்நடைகள் குறுக்கும் நெருக்கமாக சென்று விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, ஆர். எம். எஸ். காலனி பகுதியில், கால்நடைகளை வளர்ப்பவர்கள் காலை ஏழு மணி முதலே மாடுகளை சாலைகளில் விட்டு விடுகின்றனர். இதனால், இரு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது, சாலையின் குறுக்கே கால் நடைகள் வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.…
-
மதுரை, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கச்சை கட்டியில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் வழங்கினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், கச்சை கட்டியில் புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட பாசறை இணைச் செயலாளர் மு .கா. மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் வாடிப்பட்டி மு. காளிதாஸ் தலைமை…
-
விருதுநகர் மாவட்டம் , நபார்டு வங்கி மற்றும் சீட்ஸ் நிறுவனம் சார்பாக விவசாயிகளுக்கு , சிறுதானிய விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சீட்ஸ் நிறுவனத் தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசி தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீட்ஸ் நிறுவன செயலாளர். சிவக்குமார் வரவேற்று பேசினார் . மாவட்ட வேளாண்மை துறை துணை இயக்குனரும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான , நாச்சியார் அம்மாள் விவசாயி களுக்கு இடு பொருட்கள் மற்றும் சிறுதானிய…
-
மதுரை அருகே, சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிவாசல் முன்பு ஆபத்தான நிலையில் நிழற் குடை இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆகையால், நிழற் குடையை அகற்றி புதிய நிழற் குடை கட்டித் தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும், பள்ளிவாசலுக்கு வரும் பொது மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பள்ளிவாசல் பகுதியில் சுகாதார வளாகம் கழிப்பறை வசதி கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் கனமழை காரணமாக 30 ஏக்கர் கொடிக்கால் விவசாயம் பாதிப்பு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கன மழை காரணமாக நெல், வாழை, தென்னை, கொடிக்கால் போன்ற விவசாய பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளது. சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் தென்கரைக் கண்மாய் பாசனக் பகுதிகளில் கொடிக்கால் விவசாயம் செய்திருந்த…
-
சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், விவேகா நுண்கலை மன்றம் சார்பில், மாணவர்களின் கலைக்கூடல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மனந்த மற்றும் அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்…
-
மதுரை அருகே, சோழவந்தான் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில், கிணற்று பாசனம் மூலம் அறுவடைக்கு தயாராக இருக்கக்கூடிய நெற்கதிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. சோழவந்தான் அருகே இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பேட்டை மற்றும் சோழவந்தான் பகுதியில் கிணற்று பாசனம் மூலம் 100-க்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்துள்ளனர். ஒரு வாரத்தில் இந்த நெல் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நேரத்தில் மூன்று…
-
சோழவந்தான் அருகே, தென்கரை அகிலாண்டேஸ்வரி மூல நாத சாமி கோவில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் விழா:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத , ஸ்ரீமூலநாதர் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகின்ற 15.9 2024 அன்று நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பசும் பொன்மாறன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா மற்றும் கோவில் செயல் அலுவலர், பிரதோஷ கமிட்டியினர் கலந்து கொண்டனர். சிவாச் சாரியார், பட்டர் கண்ணன்…