Tag: #madhurai

  • ஒன்றிய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு – கோவையில் இடதுசாரிகள் மறியல் போராட்டம்…….

    ஒன்றிய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு – கோவையில் இடதுசாரிகள் நடத்திய மறியல் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது! ஒன்றிய நிதிநிலை பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கபட்டதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,இந்திய மாணவர் சங்க அமைப்பினர் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் அரசியல் தலைமக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் உறுப்பினர் முத்தரசன்…

  • திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில் உலக போதை எதிர்ப்பு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு

    திருவேடகம் மேற்கு விவேகானந்த கல்லூரியில், மதுரை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட காவல்துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அதன் கோட்டாசான் முத்தமிழ் கழகம், ரோஜாவனம் டிரஸ்ட் மற்றும் விவேகானந்த கல்லூரி இணைந்து உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு, செயலர் சுவாமி வேதானந்த குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினார்கள். கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் வரவேற்புரை கூறினார். சிறப்பு விருந்தினராகப்…

  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழா……மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது….

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சிவாஜி ராஜன் ரெட்டியார் பவுண் டேஷன் மற்றும் ரெட்டியார் பேரமை ப்பு சார்பாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் விழாயொட்டி, இலவச நோட்புக் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு, சர்வோ தயா சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் திருப்பதி, பாப்புரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலாஜி வரவேற்றார். மதுரை மாவட்டம் இளைஞர் அணி தலைவர் சுஜித் , மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.…

  • பத்திரிக்கையில் செய்தி வந்ததன் எதிரொலியாக சேதமடைந்த புதிய தார் சாலையை சரி செய்த அதிகாரிகள்

    மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, தச்சம்பத்து முதல் திருவேடகம் வரை புதிய தார்சாலை அமைத்த நிலையில் முறையாக சாலை அமைக் காததால், ஒரே வாரத்தில் புதிய தார் சாலையானது பெயர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சேதமடைந்த புதிய தார் சாலையின் படங்கள் வீடியோக்கள் செய்தி தால்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியான நிலையில், சேதமடைந்த தார் சாலை பகுதியினை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சரி செய்தனர் . அப்போது பொதுமக்கள் கூறுகையில்: தார்சாலை அமைக்கும் போது முறையாக போட்டிருந்தால்…

  • மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் சீருடைகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி. மூர்த்தி வழங்கினார். மதுரை கிழக்கு வட்டம், ம.சத்திரப்பட்டி ஊராட்சியில் , உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று (29.07.2024) நடைபெற்ற விழாவில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள், 151 மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள், மற்றும் பள்ளிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி…

  • மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சாலைகிராமம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடம்

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மற்றும் உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர், மாநிலங்களவை மேம்பாட்டு உறுப்பினர் திட்டத்தின் கீழ் ரூ.01.25 கோடி மதிப்பீட்டில் சாலைகிராமம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தினை திறந்து வைத்தனர். மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் உறுப்பினர் ப.சிதம்பரம் ஆகியோர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சாலைகிராமம் ஊராட்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பில், மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சாலைகிராமம் மேம்படுத்தப்பட்ட அரசு…

  • நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலனை…

    சோழவந்தான் அருகே, முள்ளிப் பள்ளம் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கையால் வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு பரிசீலனை மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிப் பள்ளம் ஊராட்சியில் ஐயப்பன் கோவில் முதல் விநாயகபுரம் காலனி வரை 1.2 கிலோமீட்டர் தூரத்திற்கு நேற்று முன்தினம் 100க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். இதில், முழுவதுமாக வீடுகளை இழந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து சமுதாய…

  • திமுக இளைஞரணி சமூக வலைத்தள பயிற்சி முகாம் …!

    திமுக இளைஞரணி சமூகவலைத்தள பயிற்சி முகாம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது. காரியாபட்டி அருகே ,மல்லாங் கிணறில் இளைஞரணி சார்பாக சமூக வலையதள பயிற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், சமூகவலை பயிற்சி முகாம் நடைபெற்றது. திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை யின் பேரில், இளைஞர் அணியின் மாவட்ட , மாநகர, மாநில , அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு சமூக வலைதள பயிற்சி…

  • தினந்தோறும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள் மாணவிகளுக்கு நீதிபதி அறிவுரை…!

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு, உத்தரவுபடி வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் வட்ட சட்டப்பணிக் குழு சார்பாக, சட்ட விழிப்புணர்வு முகாம் கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் பிரேமா முன்னிலை வகித்தார். கணினி ஆசிரியர் கார்த்திக் வரவேற்றார். பள்ளி நில நன் கொடையாளர் வழக்கறிஞர் செல்வகுமார்…

  • சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக, இலவச கண் பரிசோதனை முகாம்……

    மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் வாடிப்பட்டி சின்னத்தம்பி ரெட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பாக, இலவச கண் பரிசோதனை முகாம் கிருஷ்ணா மஹாலில் நடந்தது. இந்த முகாமிற்கு, அறக்கட்டளை செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தொழிலதிபர் சீனிவாசன், காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் கராத்தே சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை பொருளாளர் சக்திவேல் வரவேற்றார். இந்த முகாமில், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் ஹர்ஷிதா தலைமையில் செவிலியர்கள் காயத்ரி,…