Tag: #kbalakrishnan
-
கோவை உப்பிலிபாளையம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், “தமிழ்நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை துவங்கியுள்ளோம். குறிப்பாக ஏற்கனவே வெற்றி பெற்ற கோவை, மதுரையில் உடனடியாக தேர்தல் பணியை துவங்கும் வகையில் தேர்தல் பேரவை கூட்டம் நடத்துகிறோம். அதிமுக, பாஜகவை தேர்தல் களத்தில் முறியடித்து 40 தொகுதிகளில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வெற்றி…