Tag: #josalukkas

  • ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்; கொள்ளையனை கைது செய்தது எப்படி? – துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் பேட்டி

    ஜோஸ் அலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான விஜயை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த துணை காவல் ஆணையாளர் சந்தீஷ், “கோவையில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி ஜோஸ் ஆலுக்காஸ்  நகை கடையில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது, இது தொடர்பாக ரத்தினபுரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 300 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டது தர்மபுரியைச் சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது.…

  • கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் கைது

    கோவையில் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 28ம் தேதி 4.8 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றதில் இந்த கொள்ளையை செய்தது தர்மபுரியை சேர்ந்த விஜய் என்பவர் தெரியவந்தது. விஜய் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் தங்கி இருந்ததும் இந்தக் கொள்ளை சம்பவத்திற்கு விஜயின் மனைவி நர்மதா மற்றும் அவரது மாமியார் யோகராணி ஆகியோரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.…

  • ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையன் மனைவிக்கு பங்குண்டு – காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

    கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர் விஜய் என கண்டறியப்பட்டுள்ளது. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.. விஜயின் மனைவி நர்மதா இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது மனைவிக்கு இதில் பெரும் பங்கு உண்டு என தெரிவித்தார். விஜயின் மனைவியிடம்…

  • ஜோஸ் ஆலுக்காஸில் நகைகளை கொள்ளயடித்த கொள்ளையன் சிக்கினான்

    கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடையில் செவ்வாய்க்கிழமை 200 பவுன் தங்க-வைர நகைகளை கொள்ளயடித்த கொள்ளையன் சிக்கினான். கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் என்ற பிரபல நகைக்கடையில் செவ்வாய்க்கிழமை 200 பவுன் தங்க-வைர நகைகளை கொள்ளயடித்த ஒருவன் கொள்ளையடித்து போன நிலையில், இந்த கொள்ளையனை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் சந்தீஸ் தலைமையில் உதவி கமிஷனர் கணேஷ், இன்ஸ்பெக்டர்…

  • ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை போன நகைகளின் விவரங்கள்

    கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது. இந்நிலையில்  அந்த கடையில் என்னென்ன நகைகள் கொள்ளை போனது என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டைம்ண்ட் நகைகளின் விவரங்கள்: 8 மோதிரங்கள், 5 தாலிக்கொடிகள், 5 நெக்லஸ், 3 ஜோடி  ஸ்டட்கள், 1 டாலர். பிளாட்டின நகைகளின் விவரங்கள்: 2 சைன்கள், 12 ப்ரேஸ்லெட்கள் தங்க நகைகளின் விவரங்கள்: 35 செயின்கள், 7 வளையல்கள், 25 பிரேஸ்லட்டுகள், 21 நக்லஸ்கள், 30…

  • கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் கொள்ளை

    காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது சம்பந்தமாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. இங்கு தங்க நகை, வைரம், பிளாட்டினம், வெள்ளி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திங்கட்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்று விட்டனர். நள்ளிரவில் அங்கு…