Tag: #jallikattu

  • பாலமேடு அருகே பசுக்களுக்கு சிறப்பு பூஜை

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராஜகல்பட்டியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய வழக்கப்படி மாட்டுக் கொட்டத்தில் பொங்கல் | வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பசுக்களுக்கு புது கயிறு, கழுத்து மணி, வேஷ்டி, துண்டு. உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பசுக்களுக்கு தீப தூப ஆராதனைகள் செய்யப்பட்டது, பின்னர் பொங்கல் வாழைப்பழம் உள்ளிட்டவைகள், பசுக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபரும் நடிகருமான மறவர்பட்டி கேஜிபாண்டியன் கலந்துகொண்டு பசுக்களுக்கு பழம் பொங்கல் ஆகியவற்றை வழங்கினார். இந்த…

  • உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்தன – அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

    .மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது பல்வேறு காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுபிடி வீரர்கள் பலர் காலையில் அடக்கி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பரிசுகளை பெற்றனர். அமைச்சர்கள் பி. மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறை அரசு கூடுதல் செயலர் மங்கத் சர்மா, ஆட்சியர் சங்கீதா, சட்டமன்ற…

  • மதுரையில் விறுவிறுப்பாக தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

    மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது. தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியை, துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டிகளில், ஏராளமான காளைகள் பங்கேற்றன. காளைகள் சீறிப் பாய்ந்ததில், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டி துவக்க நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் பி ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பல பிரமுகர்கள்…

  • மதுரை அருகே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு- அமைச்சர் ஆய்வு

      மதுரை அருகே அவனியாபுரம் ஐல்லிக்கட்டு பணிகளை, அமைச்சர் பி. மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். அவனியாபுரத்தில் திங்கள்கிழமை காலை ஐல்லிக்கட்டு தொடங்குகிறது. மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சியும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டை, தமிழக வணிகவரித் துறை அமைச்சர் பி. மூர்த்தி, மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, ஆணையாளர் மதுபாலன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், ஐல்லிக்கட்டு பணிகளை ஆய்வு செய்தனர்.