Tag: #isro

  • இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி

    விண்வெளியில் 2 விண்கலன்களை இணைக்கும் இஸ்ரோவின் ‘ஸ்பேடெக்ஸ்’ திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஸ்பேடெக்ஸ் (SpaDeX) திட்டத்தின் கீழ் விண்வெளியில்  விண்கலன்களை ஒன்றிணைக்கும் பரிசோதனையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது இஸ்ரோ. விண்ணில் 2 செயற்கைக் கோள்களை டாக்கிங் முறையில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ வெற்றி பெற்றதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளியில் விண்கலன் ஒருங்கிணைப்பு தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள்  ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமையைத் தேடித்தந்திருக்கின்றனர்…

  • ​ககன்யான் 5-ம் கட்ட சோதனை வெற்றி

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின்  ‘ககன்யான்’ திட்டத்தின் கீழ் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் முக்கிய செயல்பாட்டு மையத்தில் ககன்யான் இன்ஜினின் 5-ம் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த வெற்றிகரமான சோதனை ககன்யான் திட்டத்தின் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாகும். இந்த சாதனை இந்தியாவின் விண்வெளி துறையில் புதிய…