Tag: #humanchain
-
வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை எல்&டி பைபாஸ் பாலம் வெள்ளலூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே வசந்த ராஜன் மற்றும் அந்த பகுதி மக்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அந்த குப்பை கிடங்கை அகற்றவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.…
-
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% உயர்வு என்பதை பொறுத்து கொள்ள முடியாது எனவும் வருடா வருடம்…
-
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…
-
தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை கண்டு கொள்ளாமல் , விற்பனைக்கு துணை நிற்கும் ஆளும் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினை பதவி விலக கோரி பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் கலந்து கொண்டார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-
திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டு, தமிழகம் போதைப் பொருட்கள் புழக்கத்தின் தலைநகரமாக மாறி, வருங்காலத் தலைமுறையினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருவதற்கும்; போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான திமுக அரசைக் கண்டித்தும்; போதைப்பொருள் புழக்கத்தை உடனடியாக கட்டுப்படுத்த வலியுறுத்தியும் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க குனியமுத்தூரில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.…