Tag: #governorravi
-
தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கழகம் சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் பாஜக, மற்றும் அதிமுகவை கண்டித்தும் கண்டன…
-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றார். தமிழகத்தின் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் மற்றும் கோ.வி.செழியன் ஆகியோர் பதவியேற்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும், கோ.வி செழியனுக்கு உயர்கல்வித் துறையும்,…
-
கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த ‘தரங் சக்தி 2024’ எனும் பன்னாட்டு விமானப் படை கூட்டு பயிற்சி நிறைவு விழா நடந்தது. இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானப்படையினர் இணைந்து கோவையில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் கூட்டு விமான பயிற்சி மேற்கொண்டனர். இதன் நிறைவு விழா இன்று நடந்தது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு. இந்திய விமானப்…