Tag: #forestdepartment
-
கோவையில் காட்டெருமை தாக்கி வனக் காவலர் அசோக் குமார் உயிரிழந்த சம்பவம் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10ஆம் தேதி மாலை, தடாகம் வன எல்லைக்குள் உள்ள தோலம்பாளையம் பகுதியில், விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு காட்டெருமையை விரட்டுவதில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த முயற்சியின் போது, அசோக் குமாரை அந்த காட்டெருமை தாக்கியதால், அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, சீலியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு…
-
கோவை துடியலூர் அருகே வரப்பாளையம்- பன்னிமடை பகுதியில் பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் உயிரிழப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடை- வரப்பாளையம் சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த யானைக் கூட்டத்தை வன பணியாளர்கள் மற்றும் இரவு ரோந்து குழுவினர் திருப்பி அனுப்பினர். அந்த யானை கூட்டத்தில் இருந்து தனிமையாக இருந்த குட்டி யானையை வனத்துறையினர் அந்த குட்டியை மீட்டு வனப்பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது அருகில்…
-
கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் வனச்சரக பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விசாகன் (40) நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (40), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ (43) மற்றும் செல்வராஜ் (38) ஆகியோர் யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விற்பனைக்காக…
-
கோவை மாவட்டம் குனியமுத்தூர் ஜேஜே.நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டுள்ளனர். கோவை குனியமுத்தூர் ஜே.ஜே நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த நாய் மற்றும் பூனை உள்ளிட்டவை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், நாய், பூனை போன்றவற்றை சிறுத்தை தான் வேட்டையாடுவதாக தகவல் பரவியது. இது குறித்து அப்பகுதி மக்கள் இது குறித்து மதுக்கரை வனத்துறைக்கு தகவல்…