Tag: #elections

  • மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள்  வீட்டில் இருந்து வாக்களிக்கும் தேதிகள் அறிவிப்பு

    கோவையில் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்து வாக்களிக்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 பாராளுமன்ற தேர்தலில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில், இல்லத்திற்கே சென்று வாக்குகளை சேகரிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி ஏற்கனவே படிவம் 12டி-ல் விண்ணப்பம் செய்த 20 கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் 2570 மூத்த குடிமக்கள் வாக்காளர்களும், 424 மாற்றுத்…

  • Untitled post 2114

    ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்த லுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேலாக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கும் என நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வலுவான செல்வாக்குடன்…

  • நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டி – சீமான் பேட்டி

    ​நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த  சீமான், ” தேர்தல் ஆணையம், சிபிஐ., போன்ற அமைப்புகள் தன்னாட்சி பெற்றது என்று நினைக்க வேண்டாம். அவர்கள் பாஜக, அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறார்கள். விவசாயி சின்னம் வேறு ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டுவிட்டது. அந்த கட்சி போட்டியிடவே இல்லை. சின்னத்தில் மட்டுமல்ல உண்மையிலேயே சீமான் விவசாயிதான். பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் டி.டி.வி தினகரனுக்கு குக்கர் கிடைத்துள்ளது. ஜி.கே.வாசனுக்கு சைக்கிள்…

  • கோவையில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட நிர்வாகம்

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தில் பொது மக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பதற்கான வாகனத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கோவை,பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் வாக்களிக்க அதிகரிக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருவதாகவும் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு மாநகர…

  • மக்களவைத் தேர்தலால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 நாள்களுக்கு மேல் கோடை விடுமுறை

    ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, மக்களவைத் தேர்தலால் கூடுதலாக 10 நாள்களுக்கு மேல் கோடை விடுமுறை அளிக்கப்ப்ட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவன்றே, ஒரே கட் டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. எனவே, தேர்தல் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய ஏதுவாக, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 12-ம்…

  • பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10  தொகுதிகள் ஒதுக்கீடு

    பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பேச்சுவார்த்தைக்கு பின்னர் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் பாஜக மாநில அண்ணாமலை முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றன அதில்…

  • தேர்தல் திருவிழா: மக்களவைக்கு செல்லும் மகத்தானவர்கள்

    இந்தியாவின் 18-வது பொதுத் தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் ஏற்பாடு செய்து ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெறும் ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட உள்ளது. தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல்…

  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் பிரதமர் மோடியின் ரோட் ஷோ கண்டிப்பாக நடைபெறும் – தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவிப்பு

    மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தாலும் வரும் 18 ஆம்  தேதி பிரதமர் மோடியின் ரோட் ஷோ கண்டிப்பாக நடைபெறும் என்று  கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார். கோவையில் கிராந்தி குமார் பாடியிடம் செய்தியாளர்கள்.வரும் 18ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்திற்கு கோவை வரும் பாரத பிரதமர் மோடிக்கு, தேர்தல் நடத்தை விதிகள் பொருந்துமா என்ற கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், பிரதமருக்கு உண்டான இசட் பிளஸ் பாதுகாப்பு,…

  • கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை பணிகள் அமலுக்கு வந்தன

    2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போட்டோ காலரியில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் புகைப்படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் கோவையில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரங்கள் மீதும் வெள்ளை பெயிண்ட்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி…

  • தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல்

    தமிழகத்தில்  ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் டெல்லியில் வெளியிட்டார். மக்களவை தேர்தலுக்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஓரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார். நாடு முழுவதும் 96.8 கோடி பேர் இந்த…