Tag: #elections

  • மகாராஸ்டிரத்தில் பாஜக ஆட்சி… காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அஸ்தஸ்தும் இல்லை!

    மகாராஸ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 48 இடங்களை வென்றுள்ளது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் கிடைக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. கேரளாவில் வயநாட்டு இடை தேர்தலில் முதன்முறையாக…

  • சட்டமன்றத் தேர்தல் : கோவையில் திமுகவினரை விரைவு படுத்திய  முதல்வர்  

    ஆசிரியர் தி கோவை ஹெரால்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மேற்கு மண்டலத்தில் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் 44 இடங்களை  அதிமுக எளிதாக கைப்பற்றியது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  24 தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டது. தமிழக மேற்கு மாவட்டங்களான தர்மபுரி, சேலம்,நாமக்கல், திருப்பூர், ஈரோடு  ,கோவை, நீலகிரி உள்ளிட்ட  பகுதிகளில் அதிமுக மிகவும் வலுவாக இருந்ததால் 44 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். முன்னாள் முதலமைச்சர்…

  • கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார் மற்றும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மருதமலை முருகன் கோவிலில் வழிபாடு

    2024 மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது. கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை மாவட்ட ஆட்சியருமான கிராந்திகுமார் பாடியிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் பெற்றுக் கொண்டார். நேற்றிரவு வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து அமைச்சர் டிஆர்பி ராஜா உடன் காந்திபுரம் பகுதிக்குச் சென்ற கோவை…

  • வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ​அறிக்கை

    தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திரு​க்கிறது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ​அறிக்கை வெளியிட்டுள்ளார்.  இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ‘கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது’ நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே! வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அதிமுக என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மக்களவைப்…

  • கலைஞர் கருணாநிதிக்கு இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

    தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “40க்கு 40 என்ற வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தோடு இந்த வெற்றியை தமிழக மக்கள் தந்துள்ளார்கள். யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என்ற பிம்பத்தை பாஜகவினர் ஏற்படுத்தினார்கள். ஆனால், இப்போது ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைக் கூட பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கருத்துக்கணிப்பு…

  • தமிழகத்தை பொறுத்தவரை இது இண்டியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேட்டி

    கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை தொகுதி வாக்கு என்னும் மையமான ஜிசிடி கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசுகையில், ” தற்போது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் உள்ளோம். முடிவில் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முதலமைச்சரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்ததுதான் இந்த அடையாளங்கள். குறிப்பாக ஜிஎஸ்டி பிரச்சனையால்  தொழிற்சாலைகள் இங்கு நலிவடைந்துள்ளது. இதனால் இங்குள்ள வாழ்வாதாரமே கேள்விக்குறியாகவே உள்ளது .அதனுடைய பதில் தான் இந்த…

  • மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை – பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வரும் திமுகவினர்.

    கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். இதனிடையே திமுக முன்னிலை வகுத்து வருவதையொட்டி கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கி வருகிறார்.குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பாஜக இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது அதில் அண்ணாமலை என்ற ஆட்டை வெட்டி பிரியாணி போடுவோம்…

  • கோவை தொகுஷி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டன

    நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 2059 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்பு சீல் வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசினர் பொறியியற் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்தி…

  • 100% வாக்கு பதிவு குறித்து இந்திய வரைபடம் போல அணிவகுப்பு விழிப்புணர்வு

    100 சதவீத வாக்கு பதிவு குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக , கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி.கல்லூரி மாணவ மாணவிகள்  இந்திய வரைபடம் போல அணிவகுத்து நின்றனர். கோவை  மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும்  விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடத்தப்பட்டு வருகின்றன.. இதன்  ஒருபகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள  பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில்   நூறு  சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பி.பி.ஜி.கல்வி…

  • கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட தங்க, வைர நகைகள் பறிமுதல்

    கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட 3.54 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெர்க்ஸ் பள்ளி அருகே பறக்கும் படை அதிகாரி மணிமேகலை தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஏம்.வி எக்ஸ்பிரஸ் என்ற தனியார் சொந்தமான ஆம்னி காரை பறக்கும் படை…