Tag: #dmk
-
திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவிக்கு ஞானசேகரன் எனும் நபரால் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அந்த எஃப் ஐ ஆர் நகல் எப்படி இணையத்தளத்தில் வெளிவந்தது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல் ஆணையர் அல்லது குறைந்த பட்சம் துணை காவல் ஆணையர்…
-
கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ,கல்பனா செந்தில், தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி, தீர்மானக் குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல் தொழில்நுட்ப தொழில்நுட்ப…
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகி, பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள் என்று விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். வி.சி.க தலைவர் திருமாவளவன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந் தார். அரசியல் காரணங் களால்…
-
தி.மு.க ஆட்சிக்கு வந்து கடந்த மூன்று ஆண்டுகளில், பல அமைச்சர்களின் செயல் பாடுகள் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகின. குறிப்பாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்களின் சர்ச்சைப் பேச்சுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சமூகவலைதளங்களில் கண்டனம் எழுந்தது. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்ததில் அமைச்சர் பொன்முடி பல விஷயங்களை சர்ச்சையாக பேசியுள்ளார். தி.மு.க அரசு…
-
ஆசிரியர் தி கோவை ஹெரால்ட் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக மேற்கு மண்டலத்தில் உள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளில் 44 இடங்களை அதிமுக எளிதாக கைப்பற்றியது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 24 தொகுதிகளை தக்க வைத்துக் கொண்டது. தமிழக மேற்கு மாவட்டங்களான தர்மபுரி, சேலம்,நாமக்கல், திருப்பூர், ஈரோடு ,கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக மிகவும் வலுவாக இருந்ததால் 44 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். முன்னாள் முதலமைச்சர்…
-
தமிழ் திரை உலகில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிக்கை மூலம் அறிவித்தார். சென்னை பனையூரில் கட்சி தலைமை அலுவலகம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் விமர்சனங்கள் ,பாராளுமன்றத் போட்டியிட்டு விஜய் தனது பலத்தை நிரூபித்திருக்க வேண்டும் என கூறினர். கொடி அறிமுகம் தொடர்ந்து …
-
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மருமகனும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரருமான முரசொலி செல்வம் மறைவிற்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்,Ex,mla ., கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து கொண்டார்.
-
கும்பகோணம் அடுத்த சோழபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “டெல்லியில் உள்ளது போல் தமிழகத்தில் ஆட்சியை பிற கட்சிகளோடு பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில் திமுக, அதிமுக இல்லை. மக்களின் செல்வாக்கு ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் உள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசினார்.
-
அன்னபூர்ணா ஹோட்டல் நிறுவனர் மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அன்னபூர்ணா உணவகங்களின் நிறுவனர் சீனிவாசன், ‘இனிப்புக்கு குறைவான ஜிஎஸ்டியும், காரத்துக்கு அதிகமான ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பில் போடுவதில் சிரமம் உண்டாகிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால், அதில் வைக்கும்…
-
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்க ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அமலாக்கத்துறையினரின் இடையீட்டு மனுவால், அவரது ஜாமின் தள்ளிப் போனது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த…