Tag: #dmk #dmkitwing #udhayanidhistalin #nkarthik #araja #pongalur palaniswamy

  • கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

    வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.* கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ,கல்பனா செந்தில், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து,கழக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்டபாணி,தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், தகவல்…

  • கோவை செம்மொழிப் பூங்கா பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வு…!

    கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கோவை காந்திபுரம் அருகே சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறும் செம்மொழி பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகளுடன் உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், “தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுகின்ற மக்கள் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம். கோவையில் செம்மொழி பூங்கா…

  • தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்……..

    தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தொடங்கி வைத்தார். 2 ஆவது முறையாக  சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான லீலா பேலஸில்,  தமிழக  முதலீட்டாளர் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு…

  • முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம்…….!

    முதலமைச்சரின் தனிச் செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டு உள்ளார். இன்று  முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில், இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது.

  • லேட்டரல் என்ட்ரி முறை சமூகநீதியின் மீதான நேரடித் தாக்குதல்…..! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

    மத்திய அரசுத் துறைகளின் பணியிடங்களுக்கு லேட்டரல் என்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வது சமூக நீதிக்கு எதிரானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அண்மையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி, லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 துணை செயலாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டிருந்தது.  இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

  • அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி…

    திருப்பூர், கோவை மாவட்ட மக்களின் கனவுத் திட்டமான, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைத்தார். ரூ.1916 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படவுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் வறட்சிப்பகுதிகளில் உள்ள 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக அதனை பயன்படுத்தும்…

  • கோவை வருகை தரும் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து கலந்துரையாடிய முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக்

    நவம்பர் 18 ஆம் தேதி, திங்கள்கிழமை காலை 8.00 மணியளவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை எஸ். என். ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெறும் “மக்களுடன் முதல்வர் திட்டம் ” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி, சனிக்கிழமை காலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கோவை எஸ். என். ஆர். கல்லூரி அரங்க வளாகத்தில்,  கோவை மாநகர் மாவட்டத்திற்குஉட்பட்ட பகுதிச் செயலாளர்கள்​ மா. நாகராஜ், துரை. செந்தமிழ் செல்வன்,…

  • உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

    திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் வழிகாட்டுதலில், கோவை வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியை கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ.ரவி தொடங்கி வைத்தார். வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தளபதி தியாகு தலைமையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள்  ஆறுமுக பாண்டி,தனகுமார், சரவணன், பாலசுப்ரமணி, முபாரக்,…

  • வால்பாறை திமுக அலுவலகத்தில் சமூக சீர்திருத்த திருமணம்

    வால்பாறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நகரக் திமுக அலுவலகத்தில் வால்பாறை நகரக் திமுக செயலாளர் குட்டி (எ)சுதாகர் தலைமையில் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் சமுதாய சீர்திருத்த திருமணம் வால்பாறை மாணிக்க எஸ்டேட் பகுதியை சேர்ந்த அண்ணாமலை பழனியம்மாள் மகன் சேட்டு கவுந்தப்பாடி யை சேர்ந்த பிரகாஷ் கோகிலாவாணி மகள் பூமிகா ஆகியோர் சமூக சீர்திருத்த திருமணம் நடைபெற்றது

  • கோவையில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

    கோவை கொடிசியா மைதானத்தில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.  ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இளைஞரணி சார்பில், திமுக  இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் முத்துச்சாமி, திமுக துணைப்பொதுச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா , மாவட்ட செயலாளர்கள் நா. கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணைமேயர் வெற்றிச்செல்வன், இளைஞரணி…