Tag: #dmk
-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்ட விவகாரத்தை தி.மு.க. எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்து அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக கூறுவது தவறானது என தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டு மாணவர்களை தி.மு.க. அரசியல் நோக்கத்திற்காக தவறாக வழிநடத்துகிறது என்றும், மாநில அரசு மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்துகிறது என்றும் குற்றம்சாட்டினார். தர்மேந்திர பிரதானின் இந்த கருத்துக்கு எதிராக, கோவையில்…
-
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து த.வெ.க இயங்கி வருகிறது. இதற்காக, முழு மூச்சில் அந்த கட்சி களம் இறங்கியுள்ளது. கூட்டணிக்கான பேரங்களையும் கவனமாக ஆராய்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவர திட்டங்களை போட்டு வருகிறது. ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் நேற்று இஸ்லாமிய மக்களுடன் நோன்பு திறப்பு விழாவில் விஜய் பங்கேற்றார். இப்படியாக த.வெ.க கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் களத்தில் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை நடந்த…
-
கோவை நேரு நகர் பகுதியில் தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சீமான் என்ற போலி பிம்பம் வன்மத்தால் கட்டமைக்கப்பட்டு உள்ளது என்பது தோலுரித்து காட்ட பட்டு உள்ளது. ஈழம் என்கிற அரசியல் 1970-க்கு பிறகு தமிழகத்தில் பல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினர் ஈழத்திற்கு சென்று வந்தாலும் எவ்வித மாறுபாடும் ஏற்படவில்லை ஆனால் சீமான் சென்று வந்த பிறகு தமிழீழ மண் ஒட்டுமொத்த மண் அழிக்கப்பட்டது. சீமான் தமிழீழ…
-
கோவை மாவட்ட கிராம ஊராட்சி அமைப்புகளை கலைக்க முடிவெடுத்த திமுக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கோவை மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகள் அருகிலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்க முடிவெடுத்து அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சிகளை பேருராட்சி, நகராட்சி, மாநகராட்சியுடன் இணைப்பதால், கிராம ஊராட்சிக்கு கிடைக்கும் மத்திய அரசின் திட்டங்கள் நிறுத்தப்படும். இதனால், நிதி இழப்பு ஏற்படும். அதோடு, கிராமப்புற மக்களுக்கு…
-
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. பெண் தலைவர்கள் எப்பொழுதுமே வீதியில் இறங்கி போராட அனுமதி கிடையாது,தி.மு.க ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என எப்பொழுதோ கூறி விட்டது. ஆனால் தி.மு.க சார்ந்த கட்சிகளுக்கும் தி.மு.க வுக்கும் போராட எப்பொழுதுமே அனுமதி உண்டு. ஆனால் இன்று தேசிய…
-
தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கழகம் சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் பாஜக, மற்றும் அதிமுகவை கண்டித்தும் கண்டன…
-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பாக முன்னாள் அமைச்சரும்,அதிமுக தலைமை நிலைய செயலாளரும், கொறடாவுமான எஸ்பி வேலுமணி தலைமையில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை முழக்கி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதிமுக தலைமை நிலையம் எஸ் பி வேலுமணி, கிணத்துக்கடவு…
-
கோவையில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும் முடிவற்ற பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் புதிய பொது விநியோக கடையை துவக்கி வைத்த அவர் பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்று 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் புதிய தார் சாலைகளாக 860 கிலோமீட்டர் சாலைகள் 415 கோடி…
-
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நேரு நகர் பகுதியில் உள்ள தனது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த போராட்டம் வருகின்ற நாட்களில் இன்னும் தீவிர படுத்தபடும்.தனிமனிதனை சார்ந்தோ அல்லது தனி மனிதருக்கு ஆட்சியாளர் மீதுள்ள கோபத்தை காட்டவோ இந்தப் போராட்டம் கிடையாது. அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.…
-
திமுக தலைமையிலான கூட்டணி, கொள்கை கூட்டணி மட்டுமல்லாமல் நிரந்தர கூட்டணி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சுதந்திர போராட்ட வீரரும், கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லக்கண்ணுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று தொடங்கி இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இதே இடத்தில் நான் நேரில் வாழ்த்து…