Tag: #death
-
கோவை ஒரே வீட்டில் இருந்தும் கணவன் இறந்த தகவலை ஐந்து நாட்களுக்கு பிறகு மனைவி தெரிந்து கொண்டு காவல் நிலையத்தில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டம் ஒண்டிப்புதூரை அடுத்த இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமாணிக்கம் (73). இவருக்கு ராஜசுலோசனா (64) மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். நாகமாணிக்கம் பெயின்டிங் வேலை செய்து வந்தார். கணவன் – மனைவி இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதனால் நாகமாணிக்கம், ராஜசுலோசனா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு…
-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த பெல்லியப்பா நகர் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் தோல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஈஷா அத்விதா (14) மற்றும் காவியா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் ஈஷா அத்விதா சுமைதாங்கி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல சன்பீம்…
-
காட்டு யானை கூலி தொழிலாளியை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நரசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது முதல் மனைவி உமா உடல்நிலை சரியில்லாமல் இறந்த பிறகு, இரண்டாவதாக திலகவதி என்பவருடன் திருமணமாகி கடந்த 11 வருடங்களாக நரசிபுரம் பகுதியில் வசித்து வருகிறார். கட்டிட வேலை மற்றும் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் சூர்யா (25), திருமணம் முடிந்து குடும்பத்துடனும், இரண்டாவது மகன்…
-
கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கோவை, காருண்யா நகர் காவல் நிலைய சரகம் பெருமாள் கோவில்பதி கிராமம் முண்டாந்துறை ஆறு தடுப்பணையில் குளிப்பதற்காக பச்சாபாளையம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த தீத்திபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிரவீன், கவின், தக்க்ஷன் மற்றும் சஞ்சய் ஆகிய…
-
கோவை வெள்ளியங்கிரி கோவிலில் ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18 ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலனி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறி உள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி…
-
வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை சென்ற 22 வயது இளைஞர் உயிரிழந்தார். கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க ஆண்டுதோறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறுவர். இந்த ஆண்டு அதே போல சிவராத்திரி முடிந்தும் பக்தர்கள் தொடர்ந்து யாத்திரை சென்று வரும் நிலையில், வீரபாண்டியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரின் 22 வயது மகன் கிரண் ஞாயிற்றுக்கிழமை வெள்ளியங்கிரி மலை ஏறினார். அவருக்கு வெள்ளியங்கிரி ஒட்டன் சமாதி என்ற 5வது மலை ஏறும்…