Tag: #cricket

  • ​கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்

    கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான 8 ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டி, ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்டு விளையாடிய, கோவை  ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மகளிர் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அதன் விவரம்…

  • கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் 

    கோவை பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் திருக்கோயில்  வரலாறை அறிந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சாமி தரிசனம் செய்தார். சனிக்கிழமை  ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக் ஞாயிற்றுக்கிழமை ஆண்டு இறுதி சனி பிரதோஷ பூஜையில் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றார். இதனைக் கண்ட அங்கு இருந்த பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.

  • இளம் வீரருடன் தோளுடன் தோள் மோதல்: ‘கோமாளி கோலி’ என ஆஸ்திரேலிய பத்திரிகை விமர்சனம்

    ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்தத் தொடரின் பில்டப்புக்காக பல ஆஸ்திரேலிய மீடியாக்கள்  கோலியைப் பற்றி புகழ்ந்து கட்டுரைகள் வெளியிட்டன. ஆனால், தொடர் தொடங்கி நடக்க தொடங்கியதும் நிலைமை தலைகீழாக மாறியது. விமான நிலையத்தில் தன்னுடைய குழந்தைகளை அனுமதியின்றி படம் பிடித்ததற்காக கோலி ஆஸ்திரேலிய மீடியாக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை, ஆஸ்திரேலிய மீடியாக்கள் பெரிதுப்படுத்தியிருந்தன.  பத்திரிகையாளர் சந்திப்பில் ஜடேஜா ஆங்கிலத்தில் பேசவில்லை என ஒன்றாகக் கூடி இந்திய அணியை விமர்சித்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்  பும்ராவை…

  • ​கோவை​ மாவட்ட முதல்வர் கோப்பைக்கான போட்டியில்  ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாம்பியன்

    ​கோவை​ மாவட்ட முதல்வர் கோப்பைக்கான போட்டியில்  ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சாம்பியன் ​கோவை மாவட்ட முதல்வர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி விறுவிறுப்பான ஆட்டத்தில் எதிரணியான ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியை தோற்கடித்து வெற்றி பெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி 7.3 ஓவர்களில் 44-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அவர்களில்  கவுசிக் பாபு, சாய் சித்தார்த், நிஷாந்த் ஆக்ய மூன்று பேர் அசாதாரண பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தினர். இது குறித்து பள்ளி…

  • உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா இலங்கையை தோற்கடித்தற்கு 4 மீனவர்களை இலங்கை கொன்றது – நாம் தமிழர் கட்சியினர் பேட்டி

    கோவையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கலாமணி ஜெகநாதன், டாக்டர் சுரேஷ் குமார் மற்றும் வழக்கறிஞர் பாசறை மாநில துணை தலைவர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள் ராஜீவ் காந்தி கொலை வழக்கு நாளையுடன் முடிவுக்கு வருகிறது. விடுதலை செய்யப்பட்டவர்கள் இலங்கை செல்ல உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கச்சத்தீவு பிரச்னை தகவல் அறியும் உரிமை சட்டம் கீழ் அண்ணாமலை வாங்கி உள்ளார். தேர்தல் பத்திரம் முறைகேடு தகவல் அறியும்…