Tag: #coronavirus
-
சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவி வருவதாக வெளிவரும் தகவல்களை அடுத்து கோவை விமான நிலையத்தில் சார்ஜா மற்றும் சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகளிடம் காய்ச்சல் பாதிப்பு கண்டறிய தானியங்கி காய்ச்சல் கண்டறியும் இயந்திரம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது எனவும் சிங்கப்பூரில் புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரத்தியேக வழிகாட்டு நெறிமுறைகளை இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது – கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில்…
-
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. கோவையை சேர்ந்த முதியவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவையை சேர்ந்த 74 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் காய்ச்சல், சுவாச பிரச்சனை, காரணமாக கடந்த ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கோவிட் தொற்று இருந்தது உறுதியானதாகவும் இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று காலமானார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் அவரது உடல் சென்னை சாலிகிராத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்ல்ப்பட்டது.
-
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை வருகிறார்கள். கேரளாவில் 280 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நிலையில் 2 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, கேரள மாநில எல்லையொட்டி இருக்கும் தமிழக பகுதிகளான கோவை, நீலகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து கோவைக்கு தினந்தோறும் வேலை, தொழில், கல்லூரி சம்பந்தமாக ஏராளமானோர் கோவைக்கு வருவதும், இங்கிருந்து…