Tag: #CONGRESS

  • இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை – காங்கிரஸ் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங்

    கோவை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய செயலாளர் ஷரிதா லைட்ப்லாங், செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பான விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டுள்ளது, வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உடனடியாக அது அமல்படுத்தப்படும் என தெரிவித்தார். எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரை ஏற்று 2014ம் ஆண்டு பதவி ஏற்ற பிரதமர் குறைந்தபட்ச ஆதார விலை செயல்படுத்தப்படும்…

  • பாராளுமன்றத் தேர்தல் – பாரதிய ஜனதா கட்சியின்  பேரலை முன்  காங்கிரஸ் கரை ஏறுமா…?

    ஆ.வெ.மாணிக்கவாசகம்   18 – வது பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாரகிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 380 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தது. தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் 302…

  • இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது கட்டம் – ஜனவரி 14ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் துவங்குகிறார் ராகுல் காந்தி

    இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாவது கட்டமாக ராகுல் காந்தி தலைமையில் மணிப்பூர் முதல் மும்பை வரை யாத்திரை நடத்தப்பட உள்ளது. ஜனவரி 14ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் துவங்கவுள்ள இந்த யாத்திரை 15 மாநிலங்கள் வழியாக 66 நாட்களில் சுமார் 6700 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இந்த நீதி யாத்திரையில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. யாத்திரை செல்லும் பாதையின் அருகில் வசிப்பவர்கள் ராகுல் காந்தி தலைமையிலான குழுவுடன் இனைந்து நடந்து…

  • நீலகிரி பாராளுமன்ற தேர்தல் பொருப்பாளராக நியமிக்கபட்ட பி.எஸ்.சரவணகுமாருக்கு வாழ்த்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர்

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நீலகிரி பாராளுமன்ற தேர்தல் பொருப்பாளராக நியமிக்கபட்ட மாநில பொதுச்செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மாமன்ற உறுப்பினர் பி.எஸ்.சரவணகுமாருக்கு மாவட்ட துணை தலைவர் குணசேகரன், ஆர் கே ரவி, தென்றல் நாகராஜ், பறக்கும் படை ராஜ்குமார், தேசபக்தன் துரைசாமி, காமராஜ், துல்லா, செந்தில்,  சந்திரகுமார், கிருஷ்ணசாமி, யேசுதாஸ், சுரேஷ், இராவணன், முரளி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

  • முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தார் கே.சந்திரசேகர ராவ்   

    தெலங்கானா தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதைத் தொடர்ந்து, கே.சந்திரசேகர ராவ் தனது  முதல்வர் பதவியை  ராஜினாமா செய்தார். தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 இடங்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளதால் தெலங்கானாவில் காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில்  தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோல்வியை தழுவியதை அடுத்து, முதல்வர் பதவியை கே.சந்திரசேகர ராவ்  ராஜினாமா செய்தார். சந்திரசேகர ராவின் ராஜினாமாவை ஏற்பதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

  • டிசம்பர் 6 ஆம் தேதி இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம்

    ​டிசம்பர் 6 ஆம் தேதி அன்று இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.​  ​ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய  5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து ​முடிந்தது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் தற்போது வாக்கு எண்​ணிக்கை நடைபெற்றது.  ஏற்கனவே நடக்க இருந்த ‘இந்தியா’ கூட்டணியின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை தேர்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அடுத்த…

  • தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி முகம் – மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் பாஜக வெற்றி பெறூம் நிலை

    மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. ஆனால் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் அதிக இடங்களில் முன்னிலையுடன் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சத்தீஸ்கரிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.