Tag: #conference
-
கோவை ராயல் கேர் மருத்துவமனை மற்றும் இந்திய ஃபோகஸ்டு அல்ட்ரா சவுண்டு சங்கத்தினர் இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கத்தில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர். கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உயர்தர மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.. சிறந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மையம் என்ற அங்கீகாரத்தை அமெரிக்க நாட்டின் எஸ்.ஆர்.சி.அமைப்பிடம் பெற்றுள்ள ராயல் கேர்…
-
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு விலங்கியல் துறை உலகத் திருக்குறள் மையம் ஆகியவை இணைந்து 100 மாநாடுகள் 100 நூல்கள் 100 தலைப்புகள் எனும் பொருண்மையில் லண்டன் அட்டம்ட் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்டிற்காக உலகச் சாதனை மாநாட்டினை நடத்தினர். இக்கல்லூரியில் திருக்குறள் காட்டும் அறிவியல் சிந்தனைகள் என்ற பொருண்மையில் அமைந்த இம்மாநாடானது கல்லூரியின் நூலகத்திலுள்ள குறுந்திரையரங்க அறையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக கல்லூரியின் முதல்வர் முனைவர் வே. சங்கீதா வாழ்த்துரை வழங்கினார்.…
-
ராயல்கேர் மருத்துவமனை மஸ்குலோ ஸ்கெலிட்டல் அல்ட்ராசவுண்ட் சொசைட்டியுடன் இணைந்து சமீபத்தில் ராயல்கேர் மருத்துவமனை வளாகத்தில் ஏங்கில் ஹாண்ட்ஸ் ஆன் எனும் கணுக்கால் தொடர்பான பயிற்சி கருத்தரங்கத்தை நடத்தியது. டாக்டர் பிபின் ஷா மற்றும் டாக்டர் ராஜஸ் சௌபால் ஆகியோர் தலைமையில், சேலம், திருப்பூர், பாலக்காடு மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 20 பயிற்சி மற்றும் இளைய கதிரியக்க மருத்துவர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். காலை அமர்வில்: சாதாரண, சோனோ உடற்கூறியல்,…
-
ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை (அஸ்பெர்கில்லோசிஸ்) நோய் குறித்த சிறப்பு பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இண்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறை சார்பில் அலர்ஜிக் பிராங்கோபல்மனரி அஸ்பெர்கில்லோசிஸ் (மூச்சுக்குழாய் பூஞ்சை ஒவ்வாமை) மற்றும் க்ரானிக் பல்மனரி ஆஸ்பெர்கில்லோசிஸ் (நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை ) பற்றிய ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நுரையீரல் துறையின் முக்கிய…
-
மருத்துவத் துறையில் ஏற்பட்டு வரும் அதிநவீன முன்னேற்றங்கள் குறித்து மருத்துவர்களும் மருத்துவம் பயிலும் மாணவர்களும் அறிந்துகொண்டு பலன்பெற வேண்டும் அதன் மூலம் மக்களுக்கு மேலும் சிறப்பான மருத்துவ சேவைகள் அளித்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஎச் மருத்துவமனை தொடர்ந்து பல மருத்துவக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தீவிர இருதய சிகிக்சை மற்றும் எக்மோ பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு கேஎம்சிஎச் கலையரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளைச் சேர்ந்த நிபுணர்கள், மருத்துவர்கள், மாணவர்கள்…
-
விபத்து மற்றும் அவசரகால நேரங்களில், மருத்துவ சேவைகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வந்து சேர்வதை உறுதி செய்வதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நிகழ்ச்சியில் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் ஆகியோர் உடனிருந்து, ஆம்புலன்ஸ் ஆபரேட்டர்களின் பங்கு குறித்து விளக்கினர். அவசர சிகிச்சை பிரிவு ஆலோசகர் டாக்டர். என். மஞ்சுநாதன், மிகப்பெரும் விபத்தின் ஆரம்ப…
-
கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் சுவாமிநாதன் கூறும் பொழுது, “கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்எல்ஆர் அரங்கில், உயர்கல்வி சிறந்தோங்க எனும் தலைப்பில் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது, 20வது ஆண்டு மாநில மாநாடாக நடைபெறும். இதனை, தமிழக உயர்கல்வி அமைச்சர் பொன்முடி துவக்கி வைக்க உள்ளார். நிகழ்வின் தொடக்கமாக உயர்கல்வி குறித்த கருத்தரங்கமும், இரண்டாம் கட்டமாக வாழ்த்தரங்கமும், பேராசிரியர்…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், பி.காம். தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் (ஐ.சி.எஸ்.எஸ்.ஆர்.) ஆதரவுடன், “நீடித்த நிலையான மேம்பாட்டிற்கு பசுமை நிதியத்தின் பங்கு” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்தார். பி.காம். தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் டி.சசிகலா தேவி வரவேற்றுப் பேசினார்.…