Tag: #coimbatorerailwaystation
-
எம்.ஜி.ஆரின் தொண்டரான ஜிம் சுகுமாறன், கோவை மாநகரில் ரயில் நிலையம் மற்றும் பிற முக்கிய இடங்களில் எம்ஜி.ஆர் அவர்களின் ஆத்மா சாந்தி இன்னும் அடையவில்லை என போஸ்டர்கள் ஒட்டி உள்ளார். அந்த போஸ்டரில், எம்ஜி.ஆர் இரவும் பகலும் நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து, கட்சியை வளர்த்த முதல்வர் ஆவார் என்று அவர் கூறியுள்ளார். மக்களுக்காக கடுமையாக உழைத்து, பல சவால்களை சமாளித்த எம்ஜி.ஆர், இன்று அவரது வளர்த்த கட்சியில் பதவிக்காக சண்டைகள் நடைபெற்று வருவதையும், இரட்டை…
-
சென்னையை சேர்ந்தவர் அருண்குமார். இவர் தனது நண்பர்கள் 7 பேருடன் நேற்று காலை கோவை வந்தார். அவர்கள் ஈஷா யோகா மையம் சென்று விட்டு சென்னை செல்வதற்காக இரவில் கோவை ரயில் நிலையம் வந்தனர். அப்போது ரயில் நிலையம் முன்புள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே அந்த வாலிபர்களில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். இதனை பார்த்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த வாலிபரை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆட்டோ டிரைவர்களுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே மோதல்…
-
கொத்தடிமை முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படும். அதன்படி நாளை கொத்தடிமை முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் கோவையில் மாநகர காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகர காவல்துறையினர், ரயில்வே காவல்துறை, மாவட்ட…
-
நாட்டின் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெற உள்ள வ.உ.சி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து முக்கியமான இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6, இஸ்லாமிய அமைப்பினர் கறுப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களிலும் , ரயில் நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் முழுமையான…