Tag: #coimbatore

  • கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த 29.500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கு

    கோவை எம்ஜிஆர் மார்க்கெட்டில் நாசர் என்பவர் காய்கறி வியாபாரியின் கடையில் 29.500 கிலோ எடை கொண்ட சேனைக்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளதால் வியாபாரிகள் வியப்புடன் பார்த்தனர்.  இதுவரை இவ்வளவு எடை கொண்டுள்ள சேனைக்கிழங்கு வந்ததில்லை என்றும் தற்பொழுது வந்தது மிகப்பெரிய அதிசயம் என்று கூறுகின்றனர்

  • I.N.D.I கூட்டணியினர்   ஹோட்டல் அன்னபூர்ணா விவகாரத்தை அரசியல் செய்கின்ற்னர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

    ஹோட்டல் அன்னபூர்ணா விவகாரத்தில் பாஜக தொண்டர்களுக்கு வானதி சீனிவாசன் எம் எல் ஏ அவர் எக்ஸ் தளத்தில், வழக்கம் போல தங்கள் மடைமாற்றும் அரசியலை துவக்கியுள்ள திமுக !கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில் அமைப்பு நிர்வாகிகளுடனான கலந்துரையாடலில், தான் நட்புரீதியாக கூறிய கருத்துக்களை I.N.D.I கூட்டணிக் கட்சிகள் தங்கள்  பொய்யாக திரித்துக் கூறி விளம்பரப்படுத்துவதை நினைத்து வருந்திய, அன்னபூர்ணா உணவகத்தின் நிறுவனர் ஸ்ரீனிவாசனே, தாமாக முன்வந்து தான் அப்படிப் பேசியிருக்க கூடாது என்று கூறியதை, வழக்கம்போல்…

  • ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்..!

    ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் 8 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்கிழமை அதிகாலை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து 8 பேருக்கும் செப்டம்பர் 14 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீனவர்களை சிறைப்பிடித்ததைக்…

  • எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக  8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை……!

    ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை , எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 8 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து, அனைவரையும் மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

  • தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை: நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்….

    நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை மே 6ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை  நடைபெற்றது. இதில்,  2 லட்சத்து 48 ஆயிரத்து 848 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.  அவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாயவுகள் நடைபெற்றுள்ளன. தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் மாணவர்களுக்கு நாளை (ஆகஸ்ட் 28) காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

  • விவசாய வளம் கொழிக்கும் 3 மாவட்டங்கள்…..

  • கோவையில் வெவ்வேறு இடங்களில் 800 போதை மாத்திரைகளை பறிமுதல்…..

    கோவையில் வெவ்வேறு இடங்களில் 800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர். கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சாயிபாபா காலனி போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது வடகோவை கூட்ஷெட் ரோட்டில் சந்தேகம்படும் படி, நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது, அவர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக…

  • பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை……

    பங்குச் சந்தையில் வர்த்தம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள்  தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு  5 ஆண்டுகள் தடை விதித்தும்,  25 கோடி ரூபாய் அபராதமும் விதித்தும் செபி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  வாடிக்கையாளர்களின் நிதியை  தவறாக பயன்படுத்தியதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து  அனில் அம்பானி  மீது செபி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும்,  பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும் இயக்குனராகவோ,  நிர்வாகத்திலோ அனில் அம்பானி…

  • தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்… 27 பே ர் உயிர்த்தப்பினர்….!

    நெல்லை மாவட்டட் ம் திசை யன்விளையிலிருந்து 27 பயணிகளுடன் சென்னை நோக்க வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, திருச்சிச்யில் டயர் வெடித்துத் தீப்பிடித்துத் எரிந்து நாசமானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த 27 பேரும் உயிர்த்ர்த்ப்பினர். நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி 27 பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுள்ளது. இந்த பேருந்து மதுரை – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சிச் யில் உள்ள மன்னார்புரம் மேம்பாலத்தினை வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 2.10…

  • கோவை செம்மொழிப் பூங்கா பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழு ஆய்வு…!

    கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் கோவை காந்திபுரம் அருகே சிறைச்சாலை வளாகத்தில் நடைபெறும் செம்மொழி பூங்கா பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகளுடன் உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், “தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படுகின்ற மக்கள் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளோம். கோவையில் செம்மொழி பூங்கா…