Tag: #chennaicyclone
-
சென்னைக்கு விடுக்கப்பட்ட அதி கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்பட்டது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து மற்றும் புறநகர் ரயில் போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டது. புயல் காரணமாக இன்று சென்னைக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஃபெஞ்சல் புயல் மகாபலிபுரம் அருகே இன்று மாலை கரையை கடக்க துவங்கிய நிலையில்…
-
சென்னை புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண பணிகளை துவக்கி, உடனடியாக ஆறாயிரம் ரூபாய் வழங்கிய தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் முகம்மது ரபி கோவையில் தெரிவித்துள்ளார்.. பல் சமய நல்லுறவு இயக்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் காந்தி தலைமையில் சாய்பாபா காலனி பகுதியில் ராஜா அண்ணாமலை அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி , மாநிலத் தலைவர்…
-
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து ரூ.2 லட்சத்தை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியாக கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரனிடம் வழங்கினர். கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ரூ.25,000/- மற்றும் கவுன்சிலர் சிங்கை மு.சிவா ரூ.25,000/- நிதி வழங்கினார். மாமன்ற உறுப்பினர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) ரூ.25,000/-, ஜி.வி. நவீன் குமார் (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) ரூ.15,000/-, ர.பூபதி (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)…
-
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் செங்கல் உற்பத்தியாளர்கள் திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா அவர்களிடம் சென்னை வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவையில் இருந்து வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல், கோவை வடக்கு மாவட்ட திமுக மற்றும் தொண்டாமுத்தூர் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், 2,600 அரிசி மூட்டைகள், 2,200 போர்வைகள் ஆகியவை புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த…
-
சென்னை தற்போது 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உள்ளடக்கியது. உலகின் 35 – வது பெரு நகரமாகவும், இந்தியாவின் நான்காவது பெரு நகரமாகவும் திகழும் சென்னை நகரம் , வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. மெட்ராஸ் என பெயர் கொண்ட இம் மாநகரை 1996 -ல் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் மு. கருணாநிதி “சென்னை” என மாற் றினார். 2011-ம் ஆண்டில் 78 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சென்னையின் தற்போதைய மக்கள் தொகை…