Tag: #cheetah

  • கோவையில் சிகிச்சை பலனின்றி சிறுத்தை பலி

    கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி வன பகுதிக்கு அண்மையாக உள்ள தொண்டாமுத்தூர், வடவள்ளி மற்றும் ஓணாப்பாளையம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கால்நடைகளைத் தாக்கி வந்த சிறுத்தை, நேற்று இரவு வனத்துறையினரால் வெற்றிகரமாக பிடிக்கப்பட்டது. அதனால், அச்சத்தால் வாடிய மக்கள் சுமாரான நிம்மதியை அடைந்துள்ளனர். ஆனால், இந்த சிறுத்தை பின்னர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்த சிறுத்தை குறித்த புகார்களைத் தொடர்ந்து, வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை…

  • பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் – பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

    கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதால், புதன்கிழமை பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை காலை, விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் சிறுத்தை இருப்பதை கவனித்துள்ளனர். மேலும், மைதானத்தில் பயிற்சியில் இருந்த மாணவர்களும் சிறுத்தையை பார்த்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு, அந்நாளிற்காக திட்டமிடப்பட்ட விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதுகாப்பு கருதி அப்புறப்படுத்தப்பட்டு, ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேசமயம், வனத்துறையினர் சிறுத்தையை…