Tag: #carfestival
-
கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில், கோவையின் காவல் தெய்வமாக மக்களால் போற்றப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர். ஆண்டு தோறும் விமர்சையாக நடத்தப்படும் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும், புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் அம்மன் பவனி வந்தார். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா…
-
கோவை மாநகர காவல் துறையின் அறிவிப்பின் படி, கோனியம்மன் கோவில் தேர்திருவிழா நாளை (05.03.2025) நடைபெறவுள்ளதால், நகரில் சில முக்கிய போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன. மாற்றப்பட்ட போக்குவரத்து திட்டம்: பேரூரிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் – செல்வபுரம், பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்லலாம். வைசியாள் வீதி வழியாக பேரூருக்கு செல்லும் வாகனங்கள் – உக்கடம், பேரூர் பைபாஸ் ரோடு, சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் ரோட்டுக்குச் செல்ல வேண்டும். மருதமலை ரோடு, தடாகம் ரோட்டில்…
-
கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன .அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் 9 ஆம் நாளான இன்று ( புதன்கிழமை) தேரோட்டம் நடந்தது. இன்று காலை 4 மணிக்கு அபிஷேகம், 5…