Tag: #bombblast

  • ​கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி

    கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை ஆர் எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.…

  • கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

    கோவை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கொடுத்த நபர் மீது பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து  வருகின்றனர். கடந்த 29ஆம் தேதி மாலை 6:50 மணிக்கு  கோவை பன்னாட்டு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.அதில்  விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதை தொடர்ந்து அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை செய்தனர் .மேலும் சோதனை முடிவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் வந்தது வதந்தி என தெரியவந்ததை…

  • கோவை தனியார் பள்ளிக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

    கோவை சோமையம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிஎஸ்பிபி பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இமெயில் மூலம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மிரட்டல் வந்தது. அதனைத் தொடர்ந்து உடனடியாக பள்ளி நிர்வாகம் குழந்தைகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தது. மேலும் பெற்றோர்களும் பதற்றத்துடன் வந்து அவர்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே வடவள்ளி போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பள்ளி முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு சென்றனர். அன்றைய தினம் சென்னையில் இயங்கி வரும் பிஎஸ்பிபி பள்ளிக்கும்…

  • கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு புஷபாஞ்சலி

    1998 ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.