Tag: #bjpitwing
-
கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அவருடன் 30க்கும் மேற்பட்ட பாஜகவினரும் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரும் தேர்தல் பறக்கும் படையினரும் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது…
-
கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது , சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி என தெரிவித்தவர், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024…
-
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளரும், கோவை பெருங்கோட்ட பொருப்பாளருமான செல்வபிரபு கோவை இதயதெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
-
பிரதமர் மோடியின் ரோட் ஷோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பாஜகவினரும் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். மேலும் இதனை மக்கள் தரிசன யாத்திரை என நாங்கள் அழைக்கிறோம். இது சரித்திர யாத்திரையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு…
-
கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பிரமாண்டமான ரோடு ஷோ பொதுமக்கள் ஆதரவுடன் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கடந்த ஒரு வார காலமாக தென் இந்தியாவை மையமாக வைத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நாளை சேலத்தில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தென்னிந்தியாவில் முழுமையாக பிரதமர் மோடி தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இது பாஜகவினருக்கு…
-
முதல் முறையாக பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி கோவையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளது. அரசியலில் பொது மக்கள் தொடர்பு மிக முக்கியமானதாகும். அவற்றில் பாத யாத்திரை, தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள்,திண்ணைக் கூட்டங்கள், அவரவர் வீடுகளில் சந்திப்பது உள்ளிட்டவர்கள் மூலம், தங்களது கருத்துக்களை கொள்கைகளை பொதுமக்களிடம் எளிதில் கொண்டு செல்லலாம். மேலும் இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் உலகில் தொழில் நுட்ப துறை மூலம் பல பரிமாணங்களில் செயலிகள் மூலம் அரசியல் கட்சியினர் நொடி நேரத்தில்…
-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர்(பரப்புரை) பதவி வகித்து வந்த அனுஷா ரவி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு அவர் அளித்துள்ள் ராஜினாமா கடிதத்தில், “தேர்தல் அரசியலில் (Electoral Politics) மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.” குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சென்னையில் பாஜக…
-
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,ஒரு அரசாங்க நிகழ்ச்சிக்கு மரியாதை கொடுத்து பொதுமக்களின் நிகழ்ச்சி என்று நாங்கள் செல்லும் பொழுது அவர் இன்று பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார்.அரசாங்கத்தின் விழாவில் பாரத பிரதமரை பற்றி குறை கூறியது பாரதிய…
-
நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2007ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார். மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன என தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலை அழைத்து தனது முடிவைக் கூறியதாக சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே சரத்குமாரை தமிழகத்தில்…
-
கொங்கு மண்டலத்தின் முதன்மையான கட்சியாக பாரதிய ஜனதா கட்சி மாறி உள்ளதாகவும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக முழுமையாக கைப்பற்றும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மத்திய அரசு மீது குற்றம்…