Tag: #bjpitwing
-
தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…
-
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் 56-வது ஆண்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு பாஜக சார்பில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அவரை வரவேற்கும் வகையில் பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், ஒரு போஸ்டரில் அமித்ஷாவின் படத்திற்குப் பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது, இது பாஜகவினரிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக…
-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முன்னிலையில், பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று விமர்சித்தவர்கள் மற்றும் பாஜகவால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணியில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். கூட்டணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு…
-
வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை எல்&டி பைபாஸ் பாலம் வெள்ளலூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே வசந்த ராஜன் மற்றும் அந்த பகுதி மக்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அந்த குப்பை கிடங்கை அகற்றவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.…
-
பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டம் செல்வபுரம் மண்டல் சார்பாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கார்த்திக் ஏற்பாட்டில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் மற்றும் ஊடக பிரிவு மாநிலச் செயலாளர் பி.பிரேம் குமார் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்தார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வி.குமார், ஆர்.பானு, மாவட்ட இளைஞர் அணி…
-
திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவிக்கு ஞானசேகரன் எனும் நபரால் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அந்த எஃப் ஐ ஆர் நகல் எப்படி இணையத்தளத்தில் வெளிவந்தது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல் ஆணையர் அல்லது குறைந்த பட்சம் துணை காவல் ஆணையர்…
-
கோவை சுந்தராபுரத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெறும் ஊழல்,FL2 மதுபான கடையை அகற்றக் கோரி, போத்தனூர் சுந்தராபுரம் சாலை சீரமைக்க கோரி, குறிச்சி மயானத்தை சீரமைக்க கோரி உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுந்தராபுரம் பகுதி அமமுக செயலாளர் பாசறை ரமேஷ், சுந்தராபுரம் பாஜக மண்டல தலைவர் ஜே முகுந்தன், கோவை தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் கே சுகுமார், மாநில பாஜக அமைப்புச் செயலாளர்…
-
கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவராக ஜெயஸ்ரீ குன்னத் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர். அதில் சமூக வலைதளங்களில் பாஜகவின் தலைவர்கள் மீது அவதூறாக கருத்துக்கள், பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். அதில் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பெயரில் உள்ள நபர், குறிப்பிட்ட கணக்கில் பா.ஜ.க தேசிய மகளிர்…
-
பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குளைந்துள்ளது.அண்ணாமலையை கொச்சை படுத்தி பேசுவது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டில் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி நடு ரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்கள்.இது பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளனர்.அங்கு பாஜகவினர் புகார் அளித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படவில்லை.எனது முகநூல் பக்கத்தில் அடையாளம்…
-
அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை கோவை அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது. இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்று வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.…