Tag: #bjp

  • தமிழக விவசாயிகள் மேல் தனிக்கவனம் செலுத்த வேண்டும்…பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K நாகராஜ் கோரிக்கை.

    தமிழக விவசாயிகள் மேல் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சரிடம் பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K நாகராஜ் அவர்கள் கோரிக்கை. சென்னை விமானநிலையத்தில் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு.சிவராஜ் சிங் சௌகான் அவர்களை சந்தித்து, தமிழ்நாடு விவசாயிகளின் நிலைமையை குறித்து விளக்கம் அளித்த பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் அவர்கள் தமிழகத்தில் விவசாயிகளுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ஓட்டு வங்கி அரசியல் மீது கவனம் செலுத்தும் திமுக அரசு,…

  • மதுபான கடைகளை அரசு நடத்தக்கூடாது தனியார் நடத்த வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

    மதுபான கடைகளை அரசு நடத்தக்கூடாது தனியார் நடத்த கோருகிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். கோவையில் நடைபெற்ற பா.ஜ.கவின் கோவை பாராளுமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, சி.ஏ.ஜி. டாஸ்மாக் நிறுவனத்தை மேற்பார்வை செய்துள்ளது. டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும்…

  • சைபர் கிரைம் காவல் துறையினரிடம் பாஜக மகளிரணியினர் புகார்

    கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவராக ஜெயஸ்ரீ குன்னத் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர். அதில் சமூக வலைதளங்களில் பாஜகவின் தலைவர்கள் மீது அவதூறாக கருத்துக்கள், பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். அதில் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பெயரில் உள்ள நபர், குறிப்பிட்ட கணக்கில் பா.ஜ.க தேசிய மகளிர்…

  • தமிழகத்தில் மாற்றம் காண விரும்பும் மக்கள

    தமிழக அரசியலில் அதிக ஆண்டுகள் ஆட்சி புரிந்த அதிமுக, தற்போது ஆளும் திமுக ஆகிய இரண்டு கட்சிகள் அல்லாத மாற்று அணிகளாக அதாவது, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள்  நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீத உயர்வை, மற்ற அரசியல் கட்சியினர், அரசியல் நோக்கர்கள், நடுநிலையாளர்கள்  வியந்து பார்க்கும் அளவிற்கு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற கால கட்டத்திற்குப்பின் அதாவது  ,1952-ம்  ஆண்டு நடந்த முதல் தேர்தலில் இந்திய தேசிய…

  • முகநூலில் கொலை மிரட்டல் – கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் புகார்

    பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தேர்தல் முடிந்த பிறகு சட்டம் ஒழுங்கு சீர்குளைந்துள்ளது.அண்ணாமலையை கொச்சை படுத்தி பேசுவது மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்டில் அண்ணாமலை புகைப்படத்தை மாட்டி நடு ரோட்டில் வைத்து வெட்டியுள்ளார்கள்.இது பெரிய அச்சுறுத்தலை கொடுத்துள்ளனர்.அங்கு பாஜகவினர் புகார் அளித்தும் இந்த செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்படவில்லை.எனது முகநூல் பக்கத்தில் அடையாளம்…

  • பாஜகவிற்கு அதிக பெரும்பான்மை கிடைக்காததற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தான் காரணம் – அமைச்சர் முத்துசாமி

    பாஜகவிற்கு அதிக பெரும்பான்மை கிடைக்காததற்கு முதல்வர் மு க ஸ்டாலின் தான் காரணமாய் இருந்தார் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். கோவையில் வரும் ஜூன் 15ஆம் தேதி மாலை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள திமுக நடத்தும் முப்பெரும் விழாவிற்கான ஏற்பாடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி, பணிகளை ஆய்வு செய்தார். இந்த பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்தார்.இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய  மு க ஸ்டாலின்…

  • இந்தியாவின் 9வது கூட்டணி ஆட்சி….தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் சாத்தியமா?

    கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலையின் தோல்வியினை பொது மக்கள், நடுநிலையாளர்கள், பாஜகவினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் எதிர் பார்க்காத ஒன்று என்பதால், அவர் சட்டமன்ற, வார்டு, பூத் வாரியாக பெற்ற ஓட்டுக்கள் குறித்து அலசி ஆராய்ந்து வருகின்றனர். அறிவியல்  கண்ணோட்டத்துடன், ஆக்கபூர்வமான, ஆழமான அனைத்து  கருத்துக்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும்   அண்ணாமலையின் சேவையினை கோவை மக்கள் பயன் படுத்த தவறி விட்டனர் என்ற கருத்தும் நிலவி வருகிறது. தேர்தல் முடிவுகளில் இந்தியாவே எதிர்பார்க்கப்பட்டதொகுதிகளில் ஒன்று கோவை.…

  • அண்ணாமலை பதவி ஏற்றது முதல் தான் கூட்டணியில் விரிசல் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி

    அதிமுக கொரடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை கோவை அதிமுக அலுவலகத்தில் பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், “நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது. இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்று வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.…

  • கலைஞர் கருணாநிதிக்கு இந்த வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன் – முதல்வர் ஸ்டாலின் பேட்டி

    தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “40க்கு 40 என்ற வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காப்போம் என்ற முழக்கத்தோடு இந்த வெற்றியை தமிழக மக்கள் தந்துள்ளார்கள். யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என்ற பிம்பத்தை பாஜகவினர் ஏற்படுத்தினார்கள். ஆனால், இப்போது ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களைக் கூட பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கருத்துக்கணிப்பு…

  • தமிழகத்தை பொறுத்தவரை இது இண்டியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி – கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேட்டி

    கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை தொகுதி வாக்கு என்னும் மையமான ஜிசிடி கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அவர் பேசுகையில், ” தற்போது 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் உள்ளோம். முடிவில் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். முதலமைச்சரின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்ந்ததுதான் இந்த அடையாளங்கள். குறிப்பாக ஜிஎஸ்டி பிரச்சனையால்  தொழிற்சாலைகள் இங்கு நலிவடைந்துள்ளது. இதனால் இங்குள்ள வாழ்வாதாரமே கேள்விக்குறியாகவே உள்ளது .அதனுடைய பதில் தான் இந்த…