Tag: #bjp

  • திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம்

    திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். ​சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவிக்கு ஞானசேகரன் எனும் நபரால் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  அந்த எஃப் ஐ ஆர் நகல் எப்படி இணையத்தளத்தில் வெளிவந்தது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல் ஆணையர் அல்லது  குறைந்த பட்சம் துணை காவல் ஆணையர்…

  • மகாராஸ்டிரத்தில் பாஜக ஆட்சி… காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அஸ்தஸ்தும் இல்லை!

    மகாராஸ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி 48 இடங்களை வென்றுள்ளது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாநிலத்தில் கிடைக்கவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. கேரளாவில் வயநாட்டு இடை தேர்தலில் முதன்முறையாக…

  • தமிழக வெற்றிக் கழகம் : தமிழக அரசியல் கட்சிகளுக்கு கலக்கம் 

    தமிழ் திரை உலகில் உச்சபட்ச நடிகராக உள்ள விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிக்கை மூலம் அறிவித்தார். சென்னை பனையூரில் கட்சி தலைமை அலுவலகம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழகத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் விமர்சனங்கள் ,பாராளுமன்றத் போட்டியிட்டு விஜய் தனது பலத்தை நிரூபித்திருக்க வேண்டும் என கூறினர். கொடி அறிமுகம் தொடர்ந்து …

  • தமிழ்நாடு மலையேற்ற திட்டம் – வெள்ளியங்கிரி மலைக்கு விலக்கு அளிக்க பாஜக கோரிக்கை

    தமிழக பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு மலையற்ற திட்டத்தினை தொடக்கி வைத்துள்ளார். அதில் தென் கைலாயம் என போற்றப்படும் வெள்ளியங்கிரி மலையும் சேர்க்கப்பட்டுள்ளது. சிவன் உறையும் மலை உங்களுக்கு சுற்றுலா செல்வதற்கான இடமா? இயற்கை ஆர்வலர்கள் இங்கு தான் மலை ஏற்ற வேண்டுமா? இந்துக்களின் புண்ணிய ஸ்தலமாக விளங்கி வரும் வெள்ளியங்கிரி மலை மீது, கடவுள் நம்பிக்கை அற்றவர்களும், பிற மதத்தவர்களும் இத்திட்டத்தின்…

  • எனக்கு 12 வயது கே.ஆர் ஜெயராமுக்கு 10 வயது; எப்படி வந்தது எங்கள் மீது குற்றச்சாட்டு – பாலாஜி உத்தமராமசாமி பேட்டி

    கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்பனை செய்வதாக கூறி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளிகோனார் என்பவரின் வாரிசுதாரர்கள் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது ஒரு வாரிசுதார பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களின் புகாருக்கு மறுப்பு…

  • கோவை சிங்காநல்லூர் மண்டல பாஜக தலைவர் சதீஷ் கட்சியிலிருந்து நீக்கம்

    அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டது தொடர்பான விவகாரத்தில் கோவை சிங்காநல்லூர் மண்டல பாஜக தலைவர் சதீஷ்  கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கோவையில் ஜிஎஸ்டி குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் யதார்த்தமாக கொங்கு தமிழில் சில கேள்விகளை கேட்டிருந்தார். இதையடுத்து அடுத்த நாளே அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியானது. அதாவது அமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், அன்னபூர்ணா சீனிவாசன் ஆகிய மூவர் இருந்த…

  • ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பு – திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு …….!

    சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி  தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும்  ஆளுநர் மாளிகையில்  தேநீர் விருந்து வைக்க உள்ளார். இதனையடுத்து இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக,…

  • 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வசந்தராஜன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

    கோவை சுந்தராபுரத்தில் வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெறும் ஊழல்,FL2 மதுபான கடையை அகற்றக் கோரி, போத்தனூர் சுந்தராபுரம் சாலை சீரமைக்க கோரி, குறிச்சி மயானத்தை சீரமைக்க கோரி உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ​சுந்தராபுரம் பகுதி அமமுக செயலாளர் பாசறை ரமேஷ், சுந்தராபுரம் பாஜக மண்டல தலைவர் ஜே முகுந்தன், கோவை தெற்கு மாவட்ட  அமமுக செயலாளர் கே சுகுமார், மாநில பாஜக அமைப்புச் செயலாளர்…

  • வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்…

    கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (சனிக்கிழமை) நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, வீடுகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்ப்பதற்காக விமானம் மூலம் இன்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் மூலம் காலை 11.15 மணியளவில் வயநாடு புறப்பட்டார். வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால்…

  • 2024 – 2025 பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் :-

    2024-25-ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 7வது முறையாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 3வது முறையாக பிரதமரான மோடி தலைமையிலான கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கை இதுவாகும். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்: *மோடி 3வது முறையாக பிரதமரான பின் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து…