Tag: #bjp #annamalai

  • பாஜக கூட்டணியில் சேருவதற்காக அதிமுகவினர் முயற்சி செய்து வருகிறார்கள்- அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முன்னிலையில், பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று விமர்சித்தவர்கள் மற்றும் பாஜகவால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணியில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். கூட்டணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு…

  • ​எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா –  மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

    அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முன்னாள் அமைச்சர்கள். தாமோதரன், செங்கோட்டையன், தங்கமணி, செ.மா.வேலுச்சாமி, கே.பி.அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், கந்தசாமி, அமுல் கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல்…

  • ஈஷா மகா சிவராத்திரி விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

    கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில்…

  • கோவை மாவட்டத்திற்கு முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

    கோவையில் பல்வேறு புதிய திட்ட பணிகளையும் முடிவற்ற பணிகளையும் அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் 80 அடி சாலையில் புதிய பொது விநியோக கடையை துவக்கி வைத்த அவர் பொங்கல் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்று 30 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  கோவை மாநகராட்சியில் புதிய தார் சாலைகளாக 860 கிலோமீட்டர் சாலைகள் 415 கோடி…

  • Untitled post 6426

    கோவையில் திமுக அரசை கண்டித்து பாஜக பேரணி – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது. கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்திற்கு அரசு அனுமதி அளித்ததாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கருப்பு தின பேரணி எனும் கண்டனப் பொதுக் கூட்டம் மற்றும் பேரணி இன்று மாலை நடைபெற்றது. காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த கண்டனப் பேரணியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிர் அணி…

  • நாளை மேல்படிப்புக்காக லண்டன் செல்கிறார் அண்ணாமலை….!

    நாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது மேல்படிப்புக்காக லண்டன் செல்கிறார்.  அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, அண்ணாமலை லண்டனில் படிக்க செல்ல உள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார்.

  • மதுரையில் கிருஷ்ண ஜெயந்தி விழா…!

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது அன்னதானத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன் மு காளிதாஸ் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக சமூக நீதிக்காக 69 சதவீத இட ஒதுக்கீடு…

  • உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை! எடப்பாடி பழனிசாமி பதிலடி…

    உழைக்காமலே பதவிக்கு வந்தவர் அண்ணாமலை.  அவருக்கு மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுக சார்பில் அண்ணாமலை செல்லும் இடங்களில் மறியல் செய்வோம் என எச்சரிக்கை விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட் டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அ.தி.மு.க.…

  • மாநில வருவாயைப் பெருக்குவதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்தவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு……

    தமிழக பாஜக அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3.2% ஆக உள்ளது. அதே சமயம், கர்நாடகா 9.9% தெலுங்கானா 3.8% ,ராஜஸ்தான் 5.9%, மேற்கு வங்கம் – 4.85, கேரளா – 4.5% பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக குறைவாகவே உள்ளது. ஜி.எஸ்.டி. மூலம் வரும் மாநில வருவாய் தமிழ்நாட்டிற்கு மைனஸில் வந்துவிட்டது. பெரிய நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க…