Tag: #bjp

  • மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம் – மத்திய இணை அமைச்சர் முருகன்

    தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த ​இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…

  • அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படம் – பாஜகவினருக்கு குழப்பம்

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் 56-வது ஆண்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு பாஜக சார்பில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அவரை வரவேற்கும் வகையில் பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், ஒரு போஸ்டரில் அமித்ஷாவின் படத்திற்குப் பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது, இது பாஜகவினரிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக…

  • டெல்லியில் பெண்களுக்கு மாதம் 2,500 : அதிரடி காட்டிய பா.ஜ.க முதல்வர்

    டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வராக ரேகா குப்தா பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த தேர்தலின் போது கடந்த ஜனவரி 31 அன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது துவாரகாவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் டெல்லி தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு பாஜக ஆட்சி அமைந்தவுடன் மாதம் ரூ.2500 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி அறிக்கை ஒன்றை வெளியீட்டு கேள்வியை எழுப்பி இருந்தது.…

  • மேடையில் மத்திய நிதியமைச்சரை விமர்சித்து  நயினாரை சிக்க வைத்த ஸ்டாலின்; காட்டமாக பாய்ந்த கராத்தே தியாகராஜன்

    சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெல்லைக்கு விசிட் அடித்தார். அப்போது, பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரனை வைத்து கொண்டே மேடையில் ஸ்டாலின் பேசியதாவது, ‘ 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எப்படிப்பட்ட பெருமழை பெய்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.  மத்திய அரசு நிவாரண நிதி தரவில்லை. மாநில அரசு தங்களிடம் இருந்த நிதியை கொண்டுதான் மக்களுக்கு உதவியது. இதை சொல்வதற்காக  நம்முடைய நயினார் நாகேந்திரன் கோபித்து கொள்ள கூடாது.…

  • Untitled post 6983
    , , ,

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. பெண் தலைவர்கள் எப்பொழுதுமே வீதியில் இறங்கி போராட அனுமதி கிடையாது,தி.மு.க ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என எப்பொழுதோ கூறி விட்டது. ஆனால் தி.மு.க சார்ந்த கட்சிகளுக்கும் தி.மு.க வுக்கும் போராட எப்பொழுதுமே அனுமதி உண்டு. ஆனால் இன்று தேசிய…

  • வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி  மனித சங்கிலி போராட்டம்

    வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கை அகற்ற கோரி வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிர்ப்பு குழு கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கோவை எல்&டி பைபாஸ் பாலம் வெள்ளலூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கே வசந்த ராஜன் மற்றும் அந்த பகுதி மக்கள் 3000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அந்த குப்பை கிடங்கை அகற்றவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.…

  • கோவையில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

    பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்டம் செல்வபுரம் மண்டல் சார்பாக மா​வட்ட செயற்குழு உறுப்பினர் டி.கார்த்திக் ஏற்பாட்டில் முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின்  நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு  கோவை தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் மற்றும்  ஊடக பிரிவு  மாநிலச் செயலாளர் பி.பிரேம் குமார் ஆகியோர் தங்க மோதிரம் அணிவித்தார்கள். இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வி.குமார், ஆர்.பானு, மாவட்ட இளைஞர் அணி…

  • போராட்டம்… பேட்டி…கைது!  பாஜகவில் குஷ்புவுக்கு திடீர் முக்கியத்துவம் பின்னணி என்ன?

    பாஜகவில் கொஞ்சகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த குஷ்புவுக்கு திடீர் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.  போராட்டம், ஆவேச பேட்டி, கைது என தலைப்புச் செய்திகளில் குஷ்பு பெயர் அடிபடுகிறது. இதன் பின்னணியில் அண்ணாமலை இருப்பதாக கூறப்படுகிறது. திமுக அனுதாபி, காங்கிரஸ் நிர்வாகி என்று அரசியல் செய்த குஷ்பு பின்னர், நேரெதிர் முகாமான பாஜகவில் சேர்ந்தார். கட்சியில் இணைந்த சூட்டோடு முக்கிய பொறுப்பு ஏதாவது தரப்படும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவிதான் கிடைத்தது. சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லாத…

  • கோவையில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை

     அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நேரு நகர் பகுதியில் உள்ள தனது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த போராட்டம் வருகின்ற நாட்களில் இன்னும் தீவிர படுத்தபடும்.தனிமனிதனை சார்ந்தோ அல்லது தனி மனிதருக்கு ஆட்சியாளர் மீதுள்ள கோபத்தை காட்டவோ இந்தப் போராட்டம் கிடையாது. அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.…

  • அண்ணாமலைக்கு என்ன ஆச்சு – திருமாவளவன் கருத்து

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ​”அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது​. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளி​க்கிறது. அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும்​.  அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும்​.  அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்பு​கிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி…