Tag: annamalai

  • கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக முழுமையாக கைப்பற்றும் – அண்ணாமலை பேட்டி

    கொங்கு மண்டலத்தின் முதன்மையான கட்சியாக பாரதிய ஜனதா கட்சி மாறி உள்ளதாகவும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக முழுமையாக கைப்பற்றும் எனவும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மத்திய அரசு மீது குற்றம்…

  • சீமானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன என்று தெரியுமா – அண்ணாமலை கேள்வி

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமானுக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன என்று தெரியுமா என்று பேசினார். “சீமான் என்னை பற்றி என்ன பேசினார் என்று தெரியவில்லை. அவருடைய சின்னம் வேண்டுமென்றால் முதலில் சீமான் அதற்கு அப்ளை செய்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை அதற்கு காரணம் கேட்டால் சென்னையில் வெள்ளம் வந்ததை காரணம் காட்டுகிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக சீமான் இருந்தால் அந்தச் சின்னம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். அவர் அங்கீகரிக்கப்பட்ட…

  • தமிழக எழுச்சிக்கு வித்திட்ட அண்ணாமலை பாத யாத்திரை

    ஆ.வெ.மாணிக்கவாசகம் அரசியல் வரலாற்றில் “பாத யாத்திரை  ” – நிகழ்வுகள் மிகவும் முக்கிய இடம் பெற்றதாகும் . மேலும் சக்தி வாய்ந்த அரசியல் நடவடிக்கைகளில் பாத யாத்திரையும் ஒன்றாகும். 1930-ம் ஆண்டு மார்ச் 12- ம் தேதி தேசத்தந்தை அண்ணல் காந்தி மகான், ஆங்கில அரசு உப்புக்கு வரி விதித்ததை கண்டித்து, குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி கடற்கரை வரை  24 நாட்கள் 386 கிலோ மீட்டர் தூரம் தமது தொண்டர்களோடு பாத யாத்திரை…

  • தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக 2024 தேர்தல் அமையும் – பிரதமர் மோடி பேட்டி

    தமிழகத்தில் உள்ள கொள்ளை கும்பலுக்கு முடிவு கட்டும் விதமாக வருகிற மக்களவை தேர்தல் அமையும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்துள்ளார். பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் என் மண் என் மக்கள் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பொதுக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்கினார். மத்திய…

  • கட்சி என்ன கட்டளையிட்டாலும் எல்.முருகன் பணியாற்றுவார் – அண்ணாமலை உறுதி

    ​​​மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த எல்.முருகன் அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர்  செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, எல்.முருகன் இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளதாகவும் பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் அவர் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார் என்றும் குறிப்பிட்டார். இவருக்கு வழங்கிய பதவி தமிழகத்தில் மேலும் பாஜகவை பலப்படுத்தும்…

  • கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு புஷபாஞ்சலி

    1998 ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சார்பில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

  • உதயநிதியை எம்.ஜி.ஆர். உடன் 1 சதவீதம் கூட ஒப்பிட முடியாது – அண்ணாமலை காட்டம்

    கோவை விமான நிலையத்தில்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “எல்.முருகன் மறுபடியும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பாஜக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. மத்திய பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பல முறை உயர்த்தப்பட்டது. 1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றது.…

  • அண்ணாமலை விரும்பி கோவையில் போட்டியிட்டால் அதற்கான பணிகளை செய்வோம்- எல் முருகன் பேட்டி

    நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இதேபோல், கேரளா மற்றும் தமிழக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை சந்தித்த பிறகு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், இன்று தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் தலைமையில்…

  • கோவையில் மோடி ரேக்ளா ரேஸ் – பரிசளித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

    கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வசந்த ராஜன் தலைமையில் L&T பைபாஸ் வெள்ளலூர் கள்ளப்பாளையம் பிரிவு அருகே மாபெரும் மோடி ரேக்ளா ரேஸ் நடைபெற்றது. போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக காரும், இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனமும்,மூன்றாம் பரிசாக தங்க நாணயங்கள் மற்றும் ஆறுதல் பரிசாக வெள்ளி நாணயங்கள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரிசு வழங்கினார். அண்ணாமலை ரேகளா…

  • தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை இருக்காது – அண்ணாமலை உறுதி

    பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து அறநிலையத்துறை இருக்காது என அண்ணாமலை கூறி உள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிகழ்வு சென்னை கோபாலபுரத்தில் உள்ள வேணுகோபால சாமி கோவிலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை பக்தர்களுடன் கண்டு களித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ” அயோத்தியில் நடந்த குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை நிகழ்வு இந்திய மக்கள் அனைவரும் ஒரே தாய், ஒரே பிள்ளை, ஒரே ரத்தம் என்பதை எடுத்துரைத்திருக்கிறது. திமுகவினர்…