Tag: annamalai
-
கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்கள் பேட்டி அளித்த போது அண்ணாமலை கோவையில் கடந்து மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்றனர் இது குறித்து தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டாமலும் தேர்தலை காரணம் காட்டாமலும்…
-
ஆ.வெ.மாணிக்கவாசகம் தமிழகத்தில் முதற் கட்டமாக நடைபெற உள்ள தேர்தலில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரங்கள்,அனல் அடிக்கும் கோடை வெயிலைக் காட்டிலும் பெரும் எரிமலையாக காணப்படுகிறது. திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி,ஆளும் கட்சி என்னும் பிரமாஸ்திரத்தோடு தேர்தலை எதிர் கொண்டு களமாடி வருகிறது. திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட. தேர்தல் அறிக்கையில், மாநில சுயாட்சி பற்றி குறிப்பிடுகையில், மாநிலங்கள் உண்மையான சுயாட்சி பெறும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கவர்னர்களை நியமிக்கும் போது, மாநில அரசுகளின் ஆலோசனைப்படி…
-
கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஊழியர் கூட்டத்திற்கு பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாராளுமன்ற தொகுதியில் போட்டி வேட்பாளர்களுடன் கிடையாது என தெரிவித்தார். மக்களை சந்தித்து ஒரே ஒரு விஷயத்தை சொல்லவேண்டும், பா.ஜ.க கொடுத்த 295 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மக்களிடம் சொல்ல வேண்டும் என தெரிவித்தார். திமுக சொல்வது போல கொடுத்த வாக்குறுதிகளை திரும்பத் திரும்ப கொடுக்கவில்லை என தெரிவித்த அவர், கோவைக்கு மோடி என்ன செய்திருக்கிறார்…
-
நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பாஜக வேட்பாளராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக பாஜக தலைமையில் இருந்து அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கோவையில் முன்னாள் மாவட்ட தலைவர் சிங்கை சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் கோவை காமராஜர் சாலையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் நடனமாடி பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடினர். தொடர்ந்து சிங்கை சட்டமன்ற பொறுப்பாளர் பாலாஜி உத்தம ராமசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக மாநில தலைவர்…
-
மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகின்றார். இத்னையடுத்து கோவையில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் ஒன்பது பேர் கொண்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் கோவை – அண்ணாமலை (மாநில தலைவர்) நீலகிரி – எல்.முருகன் (மத்திய அமைச்சர்) கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன் (முன்னாள் மத்திய அமைச்சர்) தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன் (முன்னாள் ஆளுநர்) தூத்துக்குடி – நயினார்…
-
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பாஜக பிரச்சார பொதுக்கூட்டம் சேலம் கெஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக…
-
கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். மாலை சுமார் 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் பிரதமர் கோயம்புத்தூர் வந்த பிரதமர் மோடி சுமார் 6 மணி அளவில் பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு வந்தடைந்தார். பின்னர் பாஜகவினரின் வரவேற்போடு பேரணி தொடங்கியது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மூன்று…
-
பிரதமர் மோடியின் ரோட் ஷோ குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இந்த நிகழ்ச்சியை பொதுமக்களும் பாஜகவினரும் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி இருக்கின்றனர். மேலும் இதனை மக்கள் தரிசன யாத்திரை என நாங்கள் அழைக்கிறோம். இது சரித்திர யாத்திரையாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடக்கத்தில் இருந்தே கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் ரோட் ஷோ நிகழ்ச்சியை தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு…
-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர்(பரப்புரை) பதவி வகித்து வந்த அனுஷா ரவி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு அவர் அளித்துள்ள் ராஜினாமா கடிதத்தில், “தேர்தல் அரசியலில் (Electoral Politics) மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்.” குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து சென்னையில் பாஜக…
-
நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை கடந்த 2007ம் ஆண்டு தொடங்கி நடத்தி வந்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார். மக்கள் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் மோடியுடன் இணைந்து செயல்பட்டால் என்ன என தோன்றியதால் நள்ளிரவில் அண்ணாமலை அழைத்து தனது முடிவைக் கூறியதாக சரத்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே சரத்குமாரை தமிழகத்தில்…