Tag: annamalai
-
கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது , சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி என தெரிவித்தவர், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024…
-
கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் பல்வேறு இடங்களில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.அதே போல அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்று காலை டவுன்ஹால் பகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி மக்களை பொருத்தவரை நேர்மையின் பக்கம் நிற்போம் என்பார்கள்.வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி எப்படி நம்முடைய கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் தாமரை மலர்ந்ததோ…
-
கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, “பிரதமருக்கு பிடித்த பழங்குடி மக்கள் இருக்கும் ஆனைகட்டியில் இருக்கிறோம்.மத்திய அரசின் திட்டங்கள் அதிகம் வந்து சேரும் இடம்.வளர்ச்சி அனைத்து பகுதிகளுக்கும் வர வேண்டும்.மலைப் பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை மோடி மட்டும் தான் வைத்துள்ளார்.இங்கு பள்ளிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.மோடி வீடுகள், பைப் குடிநீர், எரிவாயு சிலிண்டர் மலை வாழ் மக்களுக்கும் வந்து சேர வேண்டும். செங்கல் சூலை…
-
கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவரது பிரச்சாரத்தை துவக்கினார். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, “இது ஒரு வித்தியாசமான தேர்தல்.10 ஆண்டுகளாக பிரதமரின் தொலை நோக்கு பார்வை எழுச்சியை காட்டுகிறது. பிரதமர் 400 எம்பிக்களை தாண்டி வெற்றி வேண்டும். 70 ஆண்டுகளாக அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத விஷயங்கள் இந்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படும். பிரதமருக்கு போட்டியாளர்கள் இல்லை. கோவையை பொருத்தவரை 20 ஆண்டுகளாக வளர்ச்சி தொய்வில்…
-
ஜூன் மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல் கட்ட தேர்த லுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேலாக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்கும் என நம்பிக்கையுடன் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.உத்திர பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வலுவான செல்வாக்குடன்…
-
கோவை துடியலூர் பேருந்து நிலையம் அருகே திமுக கோவை பாராளுமன்ற வேட்பாளர் கணபதி ராஜகுமாரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சொந்த தொகுதியில் நின்றால் விரட்டி விடுவார்கள் என்று புதிதாக தொகுதியில் அண்ணாமலை போட்டியிடுகிறார் எனவும் இங்கு வானதியின் சப்போர்ட்டில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டு களமிறங்குகின்றார். கணக்கு தப்பாக போய் கோயம்புத்தூரில் மாட்டிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை என்றார். அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு போட்டியிடுகின்றார். திமுக வெற்றி அசைக்க முடியாத…
-
கோவை காளப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக கோவை தொகுதி நாடாளுமன்ற வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை, அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியவில்லை என்று வழக்கமான டிராமாவை வேட்புமனு மூலம் கொண்டு வந்துள்ளார்கள். நமது தரப்பில் இருந்து இரண்டு வேட்பு மனுக்களை கொடுத்துள்ளோம். சீரியல் நம்பர் 15 சீரியல் நம்பர் 27 எனவும் ஒன்று வந்து India Court fee மற்றும்…
-
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு 59 வேட்பு மனுக்கள் நேற்று வரை தாக்கல் செய்யப்பட்டது. இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது மொத்தம் 41 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், 18 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் மாநிலத் தலைவருமான அண்ணாமலை தாக்கல் செய்த வேட்பு மனு முறைப்படி இல்லை என்பதால், அதனை நிராகரிக்க வேண்டும் என அதிமுக, நாம் தமிழர் மற்றும் சுயேட்சை…
-
மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “பொதுமக்களின் பேராதரவு மற்றும் அன்போடு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளராக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு கொடுத்துள்ளோம். பிரதமர் மோடி 400க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோடு மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்…
-
என்னை பற்றி அண்ணாமலை தவறான கருத்துகளை கூறுகிறார் – அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் குற்றச்சாட்டு
கோவை மக்களவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை மறைந்த என் தந்தை பற்றி பேசியுள்ளார். அது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எனக்கு 11 வயது இருக்கும் போது என் தந்தை இறந்துவிட்டார். அண்ணாமலைக்கு தகர டப்பா தூக்க அப்பா இருந்தார். ஆனால் எனக்கு அதற்கு கூட அப்பா இல்லை. அண்ணாமலை கீழ் தரமான தவறான கருத்துக்களை பேசியுள்ளார். அதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்ட வேண்டும். என் அப்பா…