Tag: annamalai

  • கூட்டணி குறித்து எடப்பாடியாரும் நானும் தெளிவாக தெரிவித்துள்ளோம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி…

  • ​கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி

    கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை ஆர் எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மகளிர் அணி தேசிய தலைவர் வானதி ஸ்ரீனிவாசன், இளைஞர் அணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.…

  • நாட்டாமை  பொன்னம்பலம் பாணியில் அண்ணாமலை… தனக்கு தானே சாட்டையடி!

    சென்னை அண்ணா பல்கலையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கோவையில் அண்ணாமலை ஆக்ரோஷமாக பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட் ஞானசேகரன் தி.மு.க.,வில் சைதாப்பேட்டையில் ஒரு வட்டப்பொறுப்பில் உள்ளவர்.  ஏற்கனவே குற்றங்கள் பல செய்தவர். தி.மு.க.,வில் இணைத்து கொண்டு முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுக்கவும், சமூக வலைதளத்தில் பதிவிடவும் பதவி…

  • கோவையில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை

     அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை நேரு நகர் பகுதியில் உள்ள தனது இல்லம் முன்பு சாட்டையால் அடித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நாங்கள் எடுத்துக் கொண்டுள்ள இந்த போராட்டம் வருகின்ற நாட்களில் இன்னும் தீவிர படுத்தபடும்.தனிமனிதனை சார்ந்தோ அல்லது தனி மனிதருக்கு ஆட்சியாளர் மீதுள்ள கோபத்தை காட்டவோ இந்தப் போராட்டம் கிடையாது. அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.…

  • அண்ணாமலைக்கு என்ன ஆச்சு – திருமாவளவன் கருத்து

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ​”அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரியது​. இதில் தொடர்புடைய குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளி​க்கிறது. அந்த குற்றச்செயலில் தொடர்புடையவர்கள் வேறு யாராக இருந்தாலும் அனைவருமே கைது செய்யப்பட வேண்டும்​.  அவர்களுக்கு உடனடியாக பிணை வழங்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறைக்குள் வைத்திருந்தே விசாரணை மேற்கொள்ள வேண்டும்​.  அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்பு​கிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக எதிர்க்கட்சி…

  • திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம்

    திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார். ​சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 19 வயது மாணவிக்கு ஞானசேகரன் எனும் நபரால் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  அந்த எஃப் ஐ ஆர் நகல் எப்படி இணையத்தளத்தில் வெளிவந்தது. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று காவல் ஆணையர் அல்லது  குறைந்த பட்சம் துணை காவல் ஆணையர்…

  • தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும்- கோவையில் அண்ணாமலை பேட்டி.

    தமிழகத்தின் வளர்ச்சிக்கான அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறும் – கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஜராத் சமாஜ் மண்டபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கான பாராட்டு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை< வரும் சட்டமன்ற தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தவர்,…

  • மதுபான கடைகளை அரசு நடத்தக்கூடாது தனியார் நடத்த வேண்டும் – தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

    மதுபான கடைகளை அரசு நடத்தக்கூடாது தனியார் நடத்த கோருகிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். கோவையில் நடைபெற்ற பா.ஜ.கவின் கோவை பாராளுமன்ற தொகுதி ஆய்வுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது, சி.ஏ.ஜி. டாஸ்மாக் நிறுவனத்தை மேற்பார்வை செய்துள்ளது. டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளது. டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுப்பதே மிகவும்…

  • சைபர் கிரைம் காவல் துறையினரிடம் பாஜக மகளிரணியினர் புகார்

    கோவை பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவராக ஜெயஸ்ரீ குன்னத் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட பாஜக மகளிரணியினர், கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் மனு அளித்தனர். அதில் சமூக வலைதளங்களில் பாஜகவின் தலைவர்கள் மீது அவதூறாக கருத்துக்கள், பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர். அதில் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பெயரில் உள்ள நபர், குறிப்பிட்ட கணக்கில் பா.ஜ.க தேசிய மகளிர்…

  • இந்தியாவின் 9வது கூட்டணி ஆட்சி….தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் சாத்தியமா?

    கோவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலையின் தோல்வியினை பொது மக்கள், நடுநிலையாளர்கள், பாஜகவினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் எதிர் பார்க்காத ஒன்று என்பதால், அவர் சட்டமன்ற, வார்டு, பூத் வாரியாக பெற்ற ஓட்டுக்கள் குறித்து அலசி ஆராய்ந்து வருகின்றனர். அறிவியல்  கண்ணோட்டத்துடன், ஆக்கபூர்வமான, ஆழமான அனைத்து  கருத்துக்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும்   அண்ணாமலையின் சேவையினை கோவை மக்கள் பயன் படுத்த தவறி விட்டனர் என்ற கருத்தும் நிலவி வருகிறது. தேர்தல் முடிவுகளில் இந்தியாவே எதிர்பார்க்கப்பட்டதொகுதிகளில் ஒன்று கோவை.…