Tag: #amitshah

  • அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதியின் படம் – பாஜகவினருக்கு குழப்பம்

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையத்தின் 56-வது ஆண்டு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு பாஜக சார்பில் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் அவரை வரவேற்கும் வகையில் பல்வேறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், ஒரு போஸ்டரில் அமித்ஷாவின் படத்திற்குப் பதிலாக நடிகர் சந்தான பாரதியின் படம் இடம்பெற்றுள்ளது, இது பாஜகவினரிடையே பெரும் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாஜக…

  • பாஜக கூட்டணியில் சேருவதற்காக அதிமுகவினர் முயற்சி செய்து வருகிறார்கள்- அண்ணாமலை

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, “முன்னிலையில், பாஜகவை தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று விமர்சித்தவர்கள் மற்றும் பாஜகவால் தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கூறியவர்கள், இன்று பாஜக கூட்டணியில் சேருவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள். தற்போதைய அரசியல் சூழலில், டிடிவி தினகரனை கூட்டணியில் இருந்து விலக்குவது சாத்தியமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தினகரனுக்கு பாஜக நன்றியுடன் இருக்கும். கூட்டணி தொடர்ந்து பலமடைந்து வருகிறது. உதயநிதி நடத்திய நீட் தேர்வுக்கு…

  • ஈஷா மகா சிவராத்திரி விழா – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

    கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாலை 6 மணி அளவில் ஈஷாவில் தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா தியானலிங்கத்தை தரிசனம் செய்தார். பின்னர் ஜக்கி வாசுதேவ் அவர்கள் தியானலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை செய்தார். பின்னர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஜக்கி வாசுதேவ் அமைச்சர் அமித்ஷாவை காரில் அவரே ஓட்டி வந்தார். மேடையில்…

  • கோவை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

    கோவையில் நாளை நடைபெறும் பாஜக புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.இங்கு அவருக்கு கோவை மாநகர மாவட்ட பாஜக சார்பில் மேல தாளங்களுடன் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்படது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கும் மத்திய உள்துறை அமைச்சரை தொழில்துறையினர்…

  • கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பு காவல் நிலையம் அமைக்க ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக அமித்ஷாவுக்கு மனு

    கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பு  காவல் நிலையம் விரைவாக அமைத்திட கோரி  ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பாக அதன் தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் சென்னையில் தேசிய புலனாய்வு அமைப்பின் காவல் கண்காணிப்பாளர் மூலமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனு அளிக்கப்பட்டது..

  • மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் – குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நிறைவேற்றம்

    ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்த குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ மசோதா ஆகிய மூன்று மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா​ கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மூன்று சட்டங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மூன்று மசோதாக்களும் முறையாக இந்திய தண்டனைச் சட்டம் 1860,…