Tag: #aliyar
-
-
2021-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சி பொறுப்புக்கு வந்த பின், இவற்றில் 90 சதம் தற்போது, நிறைவேற்றி விட்டதாக திமுக அரசு தரப்பில் கூறப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, பொய்யான வாக்குறுதி களை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக,தமிழகத்தில் விடியா ஆட்சியினை அளித்து வருவதாக விமர்சனம் செய்து வருகிறது. மேலும் பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளும்,திமுக அரசினை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கோவை திருப்பூர் விவசாயி கள் பயனடையும் வகையில் தீட்டப்பட்ட…
-
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் செயல்படுத்த காரணமாக விளங்கிய வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரத ரத்னா சி.சுப்பிரமணியம், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் திருவுருவச் சிலை மற்றும் அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பானுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் அண்ணா உட்பட பலர் உள்ளனர்