Tag: #akselvaraj
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா – சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் பங்கேற்பு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கவுண்டம்பாளையம் தொகுதி சரவணம்பட்டி காவல்துறை சோதனை சாவடி அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் ஜி அருண்குமார் பேசினார். உடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ கே செல்வராஜ், கோவை புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஓகே சின்னராஜ், சிறப்பு பேச்சாளர்கள் சிட்கோ சீனு, முத்து மாணிக்கவேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் விக்னேஷ், சார்பணி…
-
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து கோவை துடியலூரில் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் தலைமையில் 1000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் உடனிருந்தார். இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
-
கோவை மாவட்ட அதிமுக அலுவலகமான இதய செய்தவம் மாளிகையில் கோவை திருப்பூர் அதிமுக உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், சொத்துவரி உயர்வை திரும்ப பெறுவதை வலியுறுத்தி மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுக தலைமை கழக நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி தலைமை வகித்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக ஆட்சியில் மாநகராட்சி பேரூராட்சி உள்ளிட்டவற்றில்…
-
கலைஞர் நினைவு நாணய வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டிருப்பது திமுக பாஜக ரகசிய கூட்டணி வெட்டவெளிச்சமாகியுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , ”அதிமுக ஆட்சியின் போது கோவை மாவட்டம் மற்றும் கோவை மாநகர பகுதிகளுக்கு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம், காந்திபுரம் மற்றும் ராமநாதபுரம் மேம்பாலங்கள்,…
-
கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு தார்மீக பொறுப்பேற்று ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி பேசினார். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய கையாலாகாத விடியா தி மு க அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் அப்பாவி மக்கள் பலர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, சட்ட ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதல்வர் மு.க.ஸ்டாலினை உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், கோவை புறநகர் தெற்கு, கோவை புறநகர் வடக்கு,…
-
கோவை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதை பொருட்கள் நடமாட்டம் தடுப்பு மற்றும் பருவ மழையினால் சேதமடைந்த – பழுதடைந்த சாலைகள் சீரமைக்க கோரியும், குடிநீர் பிரச்சனை தீர்க்ககோரியும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், டி.கே.அமுல்கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதை…
-
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. . இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.செல்வராஜ், பி. ஆர்.ஜி அருண்குமார், நகர செயலாளர் வான்மதி சேட்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சீலர் பி.டீ.கந்தசாமி,நகர மன்ற உறுப்பினர்கள் சலீம்,தனசேகர், அம்மா பேரவை பகுதி செயலாளர் குறிஞ்சி மலர் ஆர்.பழனிச்சாமி மற்றும் தொண்டர்கள் என ஐந்தாயிரத்திற்கும்…
-
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வளர்ச்சி பணிக்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்க திட்டமதிப்பு கேட்டு இரண்டு மாதங்கள் ஆகியும், இதுவரை செயல்படாத நகராட்சி ஆணையரை கண்டித்து மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் கேள்வி எழுப்பினார். ஆனால் இதற்கு சம்மந்தமே இல்லாமல் திமுகவினர், நகராட்சி தலைவர், திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் காவல் துறையிடம் பொய் புகார் அளித்து பொய் வழக்கு போட்டு உள்ளதை கண்டித்து கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.…
-
கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி பகுதியில் கே.வி.என். ஜெயராமன் ஏற்பாட்டில் அம்மா மாளிகை என்ற பெயரில் அண்ணா திமுக அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி அருண்குமார், ஏ.கே,செல்வராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்ராஜ், அதிமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.