Tag: #agriculturaluniversity

  • கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

    இந்திய அரசின் கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் ஒருங்கிணைப்புடன் கோயம்புத்தூர், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, இங்கிலாந்து டீசைடு பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் முனைவா் மா. ஆறுச்சாமி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய “நீர்நிலைகள் மாசுபாட்டின் சமூகப் பொருளாதாரத் தாக்கமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும்” என்னும் பொருண்மையிலான இரண்டாவது கருத்தரங்கத்தின் தொடக்கவிழா கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியிலுள்ள முனைவா் மாரப்ப கவுண்டா் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின்…

  • வேளாண்மை பல்கலைகழகத்தில் உழவர் தின விழா கண்காட்சி – துவக்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெறும் “உழவர் தின விழா” கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறுகையில், விவசாயத்திற்கான வேலையாட்கள் குறைந்து கொண்டு வருகிற சூழலில், மூன்றாண்டுகளில் வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பல்வேறு விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது என்றார். கண்காட்சியில் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கில் விவசாயிகள் பங்கேற்று…

  • புதிய தொழில் நுட்ப பாடங்கள் குறித்து பட்டய படிப்புகள்…- தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் வெளியிட்டது

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு உள்ள உழவர்கள், மகளிர்கள், இளைஞர்கள், பள்ளிப் படிப்பை தொடர இயலாதவர்கள், சுயதொழில் முனைவோர்கள், கிராமங்களில் சிறுதொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவர்கள் ஆகியோர் தங்களின் தொழில் நுட்ப அறிவையும் அனுபவங்களையும் வளர்த்துக் கொள்ளும் வண்ணம் இவ்வியக்ககத்தின் வாயிலாக பல சான்றிதழ் பாடங்கள், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் இதர…

  • கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி…!

    கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி- 09.07.2024 முதல் 10.07.2024 வரை இரண்டு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியானது,வேளாண்மைப் பொறியியல் கல்லூரி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுகிறது. இதில் சாம்பார் பொடி, சூப் மிக்ஸ், முருங்கை பொடி, பிஸ்கட், காளான் பொடி,ஊறுகாய், அடை மிக்ஸ்,பருப்பு பொடி, நூடுல்ஸ், பிரியாணி மிக்ஸ், பிழிதல் தொழில்…

  • கோவை கொடிசியாவில்  22″ஆம் ஆண்டு சர்வதேச வேளாண் கண்காட்சி…….

    கோவை கொடிசியா தொழிற் கூட கண்காட்சி வளாகத்தில் 22″ஆம் ஆண்டு வேளாண் கண்காட்சி சர்வதேச அளவில் நடைபெற உள்ளது . இதற்காக கோவை கொடிசியா வளாகம் முழுவதும் அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஏற்பாட்டாளர்கள் பேசுகையில், 22″ஆவது ஆண்டு ஒருங்கிணைந்த வேளாண் கண்காட்சி ஆனது “அக்ரி இன்டெக்ஸ் 2024” என்ற தலைப்பில் கோவை கொடிசியா தொழில் கூட கண்காட்சி வளாகத்தில் வரும் 11″ம் தேதி துவங்கி 15″ஆம் தேதி…

  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 54வது நிறுவன நாள்

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 54வது நிறுவன நாள் விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் தலைவர் ஷாஜி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறந்த சிறந்த பெண் விஞ்ஞானி, ஆராய்ச்சியாளர்கள், சிறந்த வேளாண் விரிவாக்க அலுவலர்,பல்கலைக்கழகத்தில் 25 வருடங்கள் பணியாற்றிய ஊழியர்கள் போன்ற பல பிரிவுகளில் பணியாற்றிய ஆசிரியரல்லாதோர் 120 பேருக்கு  பரிசுத்…

  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 4 பேர் 200 – க்கு 200 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்து உள்ளனர். 8 பேர் இரண்டாம் இடத்தைப் பிடித்து உள்ளனர். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் வேளாண்மை, தோட்டக் கலை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகள் உள்ளன. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பிரிவில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் பெற முடிவு செய்யப்பட்டன.…